tamilnadu

img

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழா

கோபி, ஜன.31- கோபிசெட்டிபாளைளயம் அருகே உள்ள கவுந் தப்பாடியில் நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு உரையாற்றினார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி ஆண்கள் மேல்நி லைப்பள்ளயில் நடைபெற்ற மிதிவண்டிகள் வழங் கும் விழாவில் பங்கேற்ற சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் கவுந்தப்பாடி பகுதிக்குட் பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அய்யம்பாளையம் மேல்நிலைப்பள்ளி உட்பட நான்கு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 603  மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலை யில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரை யாற்றினார். அப்போது அவர் பேசுகையில், மாண வர்களின் நலன் கருதி தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அதனால் மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றும் படிப்பால் மட்டுமே பெரிய இலக்கை அடைய முடியும் என்றும் மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.  இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சுற்றுச்சூழத்துறை அமைச்சர் கே.சி.கருப்ப ணன் பேசுகையில், மத்திய அரசு மீத்தேன் திட்டத்திற்கு மாநில சுற்றுச்சூழல்துறை அனுமதி கேட்கவில்லை என்றால் கூட சுற்றுச்சூழல் துறைகீழ் உள்ள சிஆர் கமிட்டில் அனுமதி வாங்கி தான் ஆக வேண்டும். 500 டிடிஎஸ் மேல் இருக்கும் நீரை சுத்திகரிப்பு செய்யதான் ஈரோடு பவானி நகரங்களில் பொது சுத்திகரிப்பு மையம் கொண்டு வரப்படுகிறது என அமைச்சர் தெரிவித்தார். இவ்விழாவில் கோபிசெட்டிபாளையம் கோட் டாட்சியர் ஜெயராமன், பவானி தாசில்தார் மாவட்ட  கல்வி அலுவலர் மற்றும் கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;