tamilnadu

img

கோவை மக்களுக்கு பி.ஆர்.நடராஜன் வழங்கிய தொகுதி வளர்ச்சி நிதி ரூ.19 கோடி - 225 பணிகள்

கோவையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு பயனுள்ள வகையில் பல வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வந்தவர் பி.ஆர்.நடராஜன். தொகுதி வளர்ச்சி நிதியை பயன்படுத்துவதிலும் மிகுந்த சிரத்தையுடன் சாதாரண ஏழை எளிய மக்கள் வாழும் பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து வழங்கியுள்ளார். குறிப்பாக ஏழை மக்கள்தங்கள் குடும்ப நிகழ்வுகளை நடத்துவதற்கு சிரமப்படுவதை கருத்தில் கொண்டு ரூ.6.76 லட்சம் மதிப்பீட்டில் 36 சமுதாயக்கூடங்கள் அமைத்துக் கொடுத்துள்ளார். பி.ஆர்.நடராஜன் 2009 முதல் 2014 ஆம் ஆண்டு வரை கோவை மக்களின் குரலைநாடாளுமன்றத்தில் ஒலி்த்தார். முதல் 2 ஆண்டுகள் தலா ரூ.2கோடி, அடுத்த 3 ஆண்டுகள் தலா ரூ.5கோடி என மொத்தம் ரூ.19கோடி அவரது தொகுதி மேம்பாட்டு நிதியாக கிடைத்துள்ளது. நிதியை முழுமையாக பயன்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் பட்டியிலில் பி.ஆர்.நடராஜன் இடம் பிடித்துள்ளார். அவரது நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகளும் தொகையும் வருமாறு:


> 47 குடிநீர் திட்டங்கள்           - ரூ.2.57 கோடி

> 44 சாலைப்பணிகள்            - ரூ.1.37 கோடி

> 30 ரேசன் கடை கட்டிடங்கள்    - ரூ.1.35 கோடி

> 36 சமுதாய கூடங்கள்           - ரூ.6.67 கோடி

> 6 சிறுபாலங்கள் - ரூ.48 லட்சம்

> 2 கலையரங்கம் - ரூ.29.50லட்சம்

> 3 பள்ளிகளுக்கு வகுப்பறைகள்  - ரூ.31.80 லட்சம்

> 8 பள்ளிகள் மற்றும் சுகாதார 

  நிலைய சுற்றுச்சுவர்      - ரூ.47.55 லட்சம்

> 7 சாக்கடை வசதிக்கான பணிகள் - ரூ.57.42லட்சம்

> 2 இடங்களில் நிழற்குடைகள்    - ரூ.2 லட்சம்

> 3 உடற்பயிற்சி கூடங்கள்

  உபகரணங்கள், உள் அரங்கம்    - ரூ.50 லட்சம்

> 7 நூலக கட்டடங்கள்           - ரூ.56 லட்சம்

> 3 பள்ளிகளுக்கு கணினி வசதி    - ரூ.17 லட்சம்

> 2 துணை சுகாதார நிலைய கட்டிடம் - ரூ.24.55 லட்சம்

> 4 அங்கன்வாடி கட்டிடங்கள் - ரூ.43.45 லட்சம்

> 2 கோபுர மின்விளக்கு             - ரூ.10லட்சம்

> ஒரு மதிய உணவுக் கூடம்          - ரூ.3.75 லட்சம்

> ஒரு பூங்கா                      - ரூ.25 லட்சம்

> 12 சுகாதார வளாகங்கள்           - ரூ.52.73லட்சம்



...என ரூ17.25கோடியை 220 பணிகளுக்கு ஒதுக்கீடு செய்துள்ளார். மேலும், கோவையின் நிலத்தடி நீர் வளத்தை பாதுகாக்க உக்கடம் பெரிய குளம் , சிங்காநல்லூர் குளங்களை தூர்வாரும் பணிக்காக ரூ.50லட்சம். வாளாங்குளக்கரையில் வெள்ளத்தடுப்பு சுவர் அமைத்திட ரூ.25லட்சம். கோவை அரசு மருத்துவமனையில் தண்ணீர் வசதி மற்றும் எக்ஸ்ரே உபகரணங்கள் வாங்க ரூ.32.61லட்சம். வடகோவை ரயில் நிலைய பயணிகள் வசதிக்காக ரூ.35லட்சம். உத்தரகாண்ட் வெள்ள நிவாரண நிதிக்குரூ.50லட்சம் என மொத்தம் 19 கோடி ரூபாய் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்துள்ளார். கம்யூனிஸ்ட்டுகளிடம் ஒப்படைக்கப்படும் பொறுப்பை அவர்கள் எவ்வாறு மக்களுக்கு பயனுள்ள வகையில் நிறைவேற்றுவார்கள் என்பதற்கு நாடு முழுவதும் பல உதாரணங்கள் உள்ளன. கோவையிலும் அதை பி.ஆர்.நடராஜன் நடத்திக்காட்டியுள்ளார்.(ந.நி)

;