tamilnadu

img

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பினை மதித்து சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை ஒப்படைத்திடுக

சேலம், ஜூன் 27- சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பினை மதித்து எங்கள் நிலத்தை எங்களுக்கே வழங்க வேண்டுமென வலியுறுத்தி விவ சாயிகள் சங்கங்களின் கூட்ட மைப்பு  சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம்- சென்னை இடையி லான எட்டு வழி சாலை திட்டத் திற்கு சென்னை உயர்நீதிமன்றம் எட்டு வழிச் சாலை திட்டத்திற் கான அரசாணையை ரத்து செய்து சட்டவிரோதமாக விவசாயிக ளிடம் பறிமுதல் செய்யப்பட்ட நிலத்தினை எட்டு வார காலத் திற்குள் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டி ருந்தது.

ஆனால், தற்போது மூன்று  மாத காலம் ஆகியும் உயர் நீதிமன்ற தீர்ப்பை மதிக்கா மல் விவசாயிகளிடம் இருந்து சட்டவிரோதமாக கையகப்படுத் தப்பட்ட நிலத்தினை அவர்களி டம் ஒப்படைக்காமல் மத்திய, மாநில அரசு மெத்தனப் போக்கு டன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வியாழனன்று சேலம்- சென்னை இடையிலான 8 வழிவ் சாலை திட்டத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகே உயர் நீதிமன்ற தீர்ப்பினை மதிக்காத இந்த தமி ழக அரசை கண்டித்து போராட் டத்தில் ஈடுபட முயன்றனர். போராட்டத்திற்கு அனுமதி மறுத்து போராட்டத்தினை ஒடுக்குகின்ற வகையில் 200க்கும் மேற்பட்ட காவல்துறை யினர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் குவிக்கப்பட்டனர். தடையை மீறி விவசாயிகள் எடப்பாடி கே.பழனிசாமி அரசை கண்டித்தும், உயர்நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத ஆட்சியா ளர்கள் கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர். இதனையடுத்து விவசாயிகள் அனைவரும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.  இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், விவசாய நிலத்தை நம்பி தான் எங்களின் குடும்ப வாழ்வாதாரம் உள்ளது. ஆனால் தற்போது அவசர கால கட்டத் திற்கு பயிர் கடனும், நில கடனும் எந்த வங்கியிலும் வாங்க முடி யாத அவல நிலைக்கு தள்ளப்பட் டுள்ளோம்.

அதற்கு முழுக்க முழுக்க காரணம் எட்டு வழிச்  சாலை திட்டத்திற்கு எங்களிடம் அடாவடித்தனமாக சட்டவி ரோதமாக ஆட்சியாளர்கள் நிலத்தை கையகப்படுத்தியது தான். ஆகவே, உயர்நீதிமன்ற உத்தரவின்படி எங்கள் நிலத்தை எங்களுக்கு வழங்க வேண்டும். இல்லை எனில் தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்வராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஏ.இராம மூர்த்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் (ஏஐகேஎம்) மாநில பொது செயலாளர் எ.சந்திர மோகன், ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் ஏ.விமலன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேலம் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஆர்.குழந்தை வேலு, எம்.சேதுமாதவன், விவ சாய சங்க மாவட்ட பொருளாளர் அன்பழகன், துணை செயலாளர் பி.தங்கவேலு உள்ளிட்ட விவ சாய சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

;