tamilnadu

img

எட்டு வழிச் சாலை திட்டத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்

சேலம், ஜூன் 12- எட்டு வழிச் சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி சேலத்தில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம்- சென்னை இடையிலான எட்டு வழிச் சாலை திட்டம் அறிவித்த நாள் முதலே பல்வேறு போராட்டங்கள், ஆர்ப் பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எட்டு வழிச் சாலை  திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்து வதற்கான பணிகளை சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து மத்திய  பாஜக மோடி அரசு அண்மையில் மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீடு தீர்ப்பில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தடையானை தொடரும் என்று அறிவித்து உள்ளது. எனவே விவசாயிகளின் வாழ்வாதா ரத்தை அளிக்கக் கூடிய வகையில் அமைய உள்ள 8 வழிச் சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி சார் பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அமைப் பாளர் ஜீவானந்தம் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.