tamilnadu

img

பொது கழிப்பிட வசதி ஏற்படுத்திடுக

 இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், நவ. 30- நாமக்கல் மாவட்டம்,பள்ளி பாளையம் பேருந்து நிறுத்தத்தில் பொது கழிப்பிட வசதி ஏற்படுத்தி தரக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சனியன்று கண்களில் கருப்பு துணி கட்டிக்  கொண்டு கவனஈர்ப்பு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.  பள்ளிபாளையம் நகராட்சிக் குட்பட்ட பேருந்து நிறுத்தத்தில் கடந்த 20 ஆண்டுகளாக சிறுநீர்  கழிப்பதற்கான பொது கழிப்பிடம் மட்டுமே உள்ளது. இந்த கழிப் பிடமும் சுகாதாரமின்றி உள்ளது.  இதனால் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளில் சிறுநீர் கூட கழிக்க முடியாத அவலநிலை ஏற் பட்டுள்ளது. எனவே, பேருந்து நிலையத்தில் இருபாலரும் பயன் படுத்தும் வகையில் பொது கழிப்பிட  வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி வாலிபர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.    ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின்  ஒன்றிய செயலாளர் எம்.கே.பிரபா கரன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் இ.கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் என்.கண்ணன், மாவட்ட பொருளாளர் வி.மணிகண்டன் மற்றும் மாவட்ட  குழு உறுப்பினர்கள் தமிழரசி,  நந்தினி ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர். முன்னாள் மாவட்ட தலைவர்கள் கே.மோகன், ஆர்.ரவி ஆகியோர் வாழ்த்தி பேசி னர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளா னோர் கலந்து கொண்டனர்.