tamilnadu

ஈரோடு மற்றும் கோவை முக்கிய செய்திகள்

மின்தடை

ஈரோடு, ஆக. 28- ஈரோடு தெற்கு கோட் டத்திற்கு உட்பட்ட வெண் டிபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக சனி யன்று (இன்று) காலை 9 மணி முதல் 5 மணி வரை வெண்டிபாளையம், கோண வாய்க்கால், மோளகவுண் டன் பாளையம், கொல்லம் பாளையம் , ஹவுசிங் யூனிட், நொச்சிக்காட்டு வலசு, சோலார் புதூர், நகராட்சி நகர், ஜீவா நகர், போக்கு வரத்து நகர், லக்காபுரம், புது வலசு, பரிசல் துறை, கருக் கம்பாளையம், நாடார் மேடு, சாஸ்திரி நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி  மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் சா.முத்துவேல் தெரிவித் துள்ளார்.

பாஜக நிர்வாகி அண்ணாமலை  மீது வழக்குப்பதிவு

கோவை, ஆக. 28 –  கோவையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக முன் னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்த னர். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை சமீ பத்தில் பாஜகவில் இணைந்தார். இதையடுத்து, வியாழ னன்று கோவைக்கு வருகை தந்த அண்ணாமலைக்கு சித்தா புதூர் பகுதியில் உள்ள பாஜக அலுவலகம் முன்பு  அக்கட்சி யினர் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தினர். இந்நிலையில், ஊர டங்கு உத்தரவை மீறி வரவேற்பு நிகழ்ச்சி நடத்தியதற்காக, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை உள்ளிட்டோர் மீது காட்டூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள் ளார். மேலும், பாஜகவின் கோவை மாவட்டத் தலைவர் நந்த குமார், மாநில பொதுச்செயலாளர் ஜி.கே.செல்வகுமார், மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாநில துணை தலை வர் கனகசபாபதி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. சட்ட விரோதமாக கூடுதல், ஊரடங்கு உத்த ரவை மீறுதல், நோய் பரப்பும் வகையில் செயல்படுதல், ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்படுதல், தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டம் ஆகிய 5 பிரிவுகளில் காட்டூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.