மத்திய அமைச்சரிடம் எஸ்.செந்தில்குமார் எம்.பி., மனு
தருமபுரி, பிப்.15- மனித மலத்தை மனிதனே அள்ளும் கொடுமைக்கு முடிவு கட்டவேண்டுமென வலியுறுத்தி தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் எஸ்.செந்தில் குமார், சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தவார் சந்த் கெலாட்விடம் நேரில் சந்தித்து மனு அளித்தார். இதுகுறித்துமத்திய அமைச்சரிடம் அவர்அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது, தருமபுரி நாடாளுமன்ற தொகுதி மிகவும் பின் தங்கிய தொகுதியாகும். இதில் அரூர், பென்னாகரம் ஆகிய சட்ட மன்ற தொகுதிகளில் தலித் மக்கள் பெரும் பான்மையாக உள்ளனர். இத்தொகுதி களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங் குடியினருக்கு மாணவர் விடுதிகள் ஏற் படுத்தி தர வேண்டும். மேலும், மனித கழிவுகளை மனிதர் களே அள்ளும் கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும். அம்மக்களை சமூக ரீதியாக மேம்படுத்த மாற்று வேலைவாய்ப்பையும் வழங்க வேண்டும். சமூக நீதி நடவடிக்கை களில் சிறப்பாக ஈடுபடும் தனிநபர்கள் மற்றும் அரசு சாரா அமைப்புக்களுக்கு சமூக நீதித்தலைவரான தந்தை பெரியார் பெயரில் ஒவ்வொரு ஆண்டும், விருதை வழங்க ஒரு குழுவை அமைக்க வேண்டு மென அம்மனுவில் தெரிவிக்கப்பட் ட்டிருந்தது.