tamilnadu

img

அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் செய்திடு

நாமக்கல், ஜூலை 10- அரசுப் பள்ளிகளில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்திட இந்திய மாணவர் சங்கம் ஒன்றிய மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டன. இந்திய மாணவர் சங்கம் நாமகிரிப்பேட்டை ஒன்றிய  மாநாடு ஒன்றியத் தலைவர் வேல்முருகன் தலை மையில் நடைபெற்றது. ஒன்றிய துணைச் செயலா ளர் புரட்சி மதி வரவேற்புரையாற்றினார். ஒன்றிய  மாநாட்டை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க ராசிபுரம் வட்ட கிளை தலைவர் ரவி துவக்கி வைத்து பேசினார். தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்க மாவட்டச் செயலர் மாதேஸ்வரன், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத் தின் மாநில செயற்குழு உறுப்பினர் மருத்துவர் வி.பிரகாஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.  மாணவர் சங்க மாவட்ட தலைவர் எம்.தேன்மொழி சிறப்புரையாற்றினார். இதனையடுத்து சங்கத்தின் புதிய ஒன்றிய தலைவராக விக்னேஸ்வரன், ஒன்றிய செயலாளராக அஜீத், ஒன்றிய துணைத் தலைவராளக தினேஷ், புரட்சிமதி, ஒன்றிய துணைச் செயலாளராளக வேல்முருகன், ஞானேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டன. முடி வில் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பிரகாஷ் சிறப்புரையாற்றினார். ஒன்றிய குழு உறுப்பினர் தினேஷ் நன்றியுரையாற்றினார்.

ராசிபுரம் ஒன்றிய மாநாடு 
ராசிபுரம்  ஒன்றிய மாநாட்டிற்கு மாவட்ட துணை செயலாளர் தங்கமணி தலைமை வகித்தார். சங்க மாவட்ட செயலாளர் டி.சரவணன், சமூக ஆர்வலர் கலைச்செல்வன், வே.பிரபாகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினார். ராசிபுரம் ஒன்றியத் தலைவராக தங்கராஜ், செய லாளராக சுரேஷ், துணைத் தலைவர்கள் புவியரசன், ஜீவா, துணைச் செயலாளர்கள் புகழேந்தி, சௌந்தர் உட்பட17 பேர் கொண்ட ஒன்றிய குழு தேர்வு செய்யப்பட்டது.

தீர்மானங்கள்

முன்னதாக, இம்மாநாட்டில் ஆயில்பட்டி சரஸ்வதி மெட்ரிகுலேஷன் பள்ளியில் கட்டாய கல்வி  உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்த்த மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூல் செய்வதை கைவிட வேண்டும். அனைத்து பள்ளி களிலும் மடிக்கணினி வழங்காத மாணவர்களுக்கு உடனடி யாக மடிக்கணினி வழங்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.