tamilnadu

மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.8000 வழங்கிடுக

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

ஈரோடு,ஜன 31- விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட் டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா தலைமையில் விழா வெள்ளியன்று நடைபெற்றது. இதில் பல்வேறு விவசாய அமைப்புகள் சார்பில் கோரிக்கைகளை மனுக்களை அளித்து பேசுகையில்,மஞ்சளுக்கு, கடந்த வாரத்தில் ஆந்திராவில் ஒரு குவிண் டாலுக்கு 6,835 ரூபாய் வழக்குவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நி லையில் ஈரோடு மாவட்டத்தில் மிக  குறைந்த அளவிலேயே கொடுக்கப்ப டுகிறது. இதனால் குவிண்டாலுக்கு 8 ஆயிரம் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தமிழ்நாடு நில மேம்பாட்டு திட்டத்தின்  கீழ் சித்தோடு முதல் மேட்டுப்பாளையம் வரை 115 கிலோமீட்டர் தேசிய நெடுஞ் சாலை அமைப்பதற்காக விவசாயிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதே போல சக்தி - ஈரோடு போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது. இந்நிலையில் கிராம பகுதிகளுக்கு 110 அடியும், நகரப்  பகுதிகளுக்கு 80 அடியும் நிலம் கையகப் படுத்த வருகிறது. இந்நிலையில் கிராமப்ப குதி விவசாய நிலங்களில் 70 சதவீதம் வரை கையகப்படுத்தப்படுகிறது. இதற்கு  ஒரு ஏக்கருக்கு ரூ.12லட்சம் என இழப் பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் அதே அளவு வழங்கப்பட்ட அளவுகளில் 72 சென்ட் எடுக்க வேண்டும் என நோட்டீஸ் ஒட்டப்பட்டது. பலவிதமாக நோட்டீஸ் அறிவிப்புகள் வந்து கொண்டு இருக்கிறது. இதனை சரி செய்ய வேண்டும். பவானி பெருந்தலையூர் ஏரிக்கரை பகுதிகளில் வீடுகள் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதை அப்புறப்படுத்த வேண்டும். நெல் கொள்முதல் நிலையங் களில் விவசாயிகள் கொள்முதல் செய்வ தற்கு மூட்டைக்கு 30 முதல் 40 ரூபாய் வரை பணம் வசூல் செய்யப்படுகிறது. இது தடுக்கப்பட வேண்டும். பவானி சாகர் அணை பகுதிகள் வழியாக  பத்து கதவணைகள் கட்ட வேண்டும் என பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கதவணை கட்டப்பட்டிருந்தால் சுமார் ஆறு டிஎம்சி வரை காவிரியில் கடலுக்கு செல்வது தடுக்கப்படும்.  காலிங்கராயன் வாய்க்கால் பகுதிக ளில் கான்கிரீட் அமைக்கும் பணியானது,  கருங்கல்பாளையம் முதல் ஆவடிபாளை யம் வரை நடைபெறாமல் உள்ளது.  இதுதொடர்பாக  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தாளவாடி பகுதிகளில்  புறம்போக்கு இடங்களில் கிராம பகுதி  பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதிகளுக்கு பட்டா வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்ப குதிகளில் தூய்மை காவலர்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயான கூலியாக ரூ. 80 என வழங்கப்படுகிறது. இவர்களுக்கு கூலியை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் வேலை  செய்யும் விவசாய கூலித் தொழிலாளர்க ளுக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்ப ளம் வழங்கப்படவில்லை. இவர்க ளுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக் கப்பட வேண்டும். மொடக்குறிச்சி பகுதிக ளில் உள்ள வேளாண்மை அலுவலக மும் பழுதடைந்து காணப்படுகிறது. அங்கு  பாதுகாக்கப்பட்ட விவசாயப் பொருள்கள் சேதம் அடைந்து வருகிறது. இதனை சரி  செய்து கொடுக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களாக மாவட்ட வருவாய் அலுவலரிடம் அளித்த னர்.

;