tamilnadu

img

கல்வி வழிகாட்டல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உதகை,மார்ச் 6- உதகை சேரம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி வழிகாட்டல் விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்,  மக்கள் ஊடக மையம் ஆகிய அமைப்பு கள் இணைந்து சேரம்பாடி அரசு மேல்நி லைப்பள்ளியில் கல்வி வழிகாட்டல் விழிப்பு ணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். வெள்ளி யன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பள்ளி  தலைமையாசிரியர் முனைவர்.கிருஷ்ண தாஸ் தலைமை தாங்கினார். கூடலூர் நுகர் வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளி முத்து முன்னிலை வகித்தார். பள்ளி ஆசிரியர்  கண்ணதாசன் வரவேற்றார். முன்னதாக, மக்கள் ஊடக மைய நிர்வாக  இயக்குநர் சித்திரவேல் பேசுகையில், கற்கும் கல்வி என்பது அழியாத செல் வம். படிக்கும் முன் குறிக்கோளை நிர்ண யித்து படிப்பதும், படித்தபின் குறிக்கோ ளுக்கு ஏற்ப தகுதியை வளர்த்து கொள்வ தும் அவசியம் என்றார். மேலும், கல்வியை மதிப்பெண்னுக்காக படிப்பதை விட மனதில் புரியும் வகையில் படிக்க வேண்டும். கற்பவர்களால் தான் சமூக மாற்றம் ஏற்படுத்தப்படுகிறது. எனவே  மாணவர்கள் அனைவரும் இடைநிற்றலை தவிர்த்து முழுமையாக படிப்பில் கவனம்  செலுத்த வேண்டும் என்று கூறினார்.  இதைத்தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் வழங் கப்பட்டது. இதில் பள்ளி ஆசிரியர்கள் உட் பட ஏராளமான மாணவர்கள் கலந்து கொண் டனர்.