tamilnadu

அனுமதியற்ற ரேப்பிடோ இருசக்கர வாகனத்தில் பயணம் செய்ய வேண்டாம் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வேண்டுகோள்

கோவை, ஜூன் 13–  அரசு அனுமதி பெறாமல் இயக் கப்படும் ரேப்பிடோ இருசக்கர வாக னங்களில் பொதுமக்கள் பயணம் செய்ய வேண்டாம் என கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இது தொடர்பாக மாவட்ட நிர் வாகத்தின் சார்பில் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித் திருப்பதாவது, கோவை மாவட் டத்தில் தனிநபர் இருசக்கர வாக னங்களின் ரேப்பிடோ என்கிற செயலி மூலம் முன்பதிவு செய்து பொதுமக்களை ஏற்றிச் செல்லும் வாடகை வாகனமாக இயக்கப் படுகிறது என்ற புகார் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவை சரகத்தின் இணைப் போக்குவரத்து ஆணையரின் உத்தரவின் பேரில் கோவை மாநகர வட்டாரப் போக்கு வரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் காவல் துறையுடன் இணைந்து ரேஸ்கோர்ஸ் சாலை, ரயில்வே சந்திப்பு, மகளிர் பாலிடெக்னிக், காந்திபுரம் ஆகிய இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரேப்பிடோ செயலி மூலம்  பதிவு செய்த 15 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவல கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  இதற்கு முன்பாக, இருகட்டங் களில் சுமார் 62 வாகனங்கள் இதே குற்றத்திற்காக சிறைபிடிக்கப்பட்டு, உரிய அபராதத் தொகை நீதிமன் றத்தில் செலுத்திய ரசீதுடன் வந்த பின்பே விடுவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அரசு அனுமதி பெறாமல் இயக்கப் படும் இத்தகைய இருசக்கர வாக னங்களில் பொதுமக்கள் பயணம் செய்ய வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத் துள்ளார்.