tamilnadu

img

உலக சாதனை செய்த மாணவருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

உலக சாதனை செய்த மாணவருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுதருமபுரி, ஜூன் 4-மைக்ரோ ஆர்ட்ஸில் உலக  சாதனை செய்த மாணவருக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.தருமபுரி நகரம்  குமாரசாமிபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் மகன் கவியரசு (18). இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ இறுதி ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கவியரசு கடந்த சில வருடங்களாக சாக்பீஸில் சங்கிலி, கோயில் தூண்கள், யாழி, அப்துல்கலாம் மற்றும் விநாயகர் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட உருவங்களை சாக்பீஸில் செதுக்கி சாதனை படைத்துள்ளார்.மேலும், சாக்பீஸில் புத்தர் சிலையை நாலு நிமிடம் 29 வினாடியில் செய்து சாதனை படைத்துள்ளார். இவரின் சாதனைகளை அறிந்த தருமபுரி  மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி உலகசாதனைப் பதிவு நிறுவனமான ராமநாதபுரம் வில் மெடல் ஆப் வேல்டு ரெக்கார்டுக்கு அனுப்பி வைத்தார்.இதையடுத்து அந்நிறுவனம் கல்லூரி மாணவர் கவியரசுக்கு உலக சாதனைக்கான சான்றிதழ் வழங்கியது. இந்நிலையில்  தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி கல்லூரி மாணவர் கவியரசை அழைத்து உலக சாதனைக்கான சான்றிதழை வழங்கிப் பாராட்டினார்.

;