tamilnadu

img

திருப்பூர் அரசு மருத்துவமனையில் நரம்பியல் மருத்துவர் வராததால் மாற்றுத் திறனாளிகள் பரிதவிப்பு

திருப்பூர், நவ. 8 – திருப்பூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் வெள்ளியன்று மாற்றுத் திறனா ளிகளைப்  பரிசோதிக்கும் நரம்பி யல் மருத்துவர் வராததால் பல பகு திகளில் இருந்து வந்த மாற்றுத் திறனாளிகள் பரிதவிப்புடன் காத் திருந்து, ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். திருப்பூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை யன்று மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவச் சான்றிதழ் வழங்கும் மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெறும். இந்த முகாமுக்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் மாற்றுத் திறனாளிகள், உதவியாளர்களுடன் வருவார் கள். இதில் நரம்பு மற்றும்  எலும்பு மருத்துவர்கள் மாற்றுத் திறனாளி களைப் பரிசோதித்து அவர்களது ஊனத்தின் தன்மை, அளவு பற்றி சான்று வழங்குவார்கள். இந்நிலையில் (நவ.8) வெள்ளி யன்று ஏராளமான மாற்றுத் திறனாளிகள் திருப்பூர் அரசு மருத் துவமனைக்கு வந்து காத்திருந்த னர். ஆனால் நீண்ட நேரம் காத் திருந்தும் நரம்பியல் மருத்துவர் வரவில்லை. இது தொடர்பாக மருத்துவமனையில் இருந்த ஊழி யர்களிடம் விசாரித்தபோது, காத்திருங்கள், மருத்துவர் வருவார் என்று மட்டும் பதில் கூறப்பட் டுள்ளது. எனவே எதிர்பார்ப் புடன் பல மணி நேரம் அவர்கள் காத்திருந்தனர். மருத்துவமனை யில் இது தொடர்பாக யாரிடம் விசாரிப்பது என்று கேட்டபோ தும், அங்கிருந்த ஊழியர்கள் தெளிவான பதிலளிக்கவில்லை என்று மாற்றுத் திறனாளிகள் கூறினர். எனவே காலை முதல் மதியம் வரை அவர்கள் காத்தி ருந்தனர். பரிசோதனை முகாம் நேரம் முடிவடைந்த நிலையில் தான் நரம்பியல் மருத்துவர் வர மாட்டார் என தெரியவந்தது.

இதையடுத்து மாற்றுத் திற னாளிகளும், அவர்களுடன் வந்த உதவியாளர்களும் ஏமாற்றத்து டன் திரும்பிச் சென்றனர். இதுகுறித்து திருப்பூர் தெற்கு நகர அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் சங்க செயலாளர் ரமேஷ் கூறுகையில், வாரந்தோறும் வெள் ளிக்கிழமை நடைபெறும் முகா மிற்கு எலும்பு, நரம்பு மருத்துவர் கள் வர வேண்டும். கடந்த காலத் தில் அவர்கள் தொடர்ந்து விடுப டாமல் பங்கேற்று வந்தனர். ஆனால் சமீப காலமாக நரம்பி யல் மருத்துவர் தொடர்ச்சியாக இம்முகாமுக்கு வருவதில்லை. அதைப் பற்றி யாரிடம் கேட்டா லும் தெளிவான பதில் தருவதும் இல்லை. உடுமலைபேட்டை, தாராபு ரம், வெள்ளகோவில் உள்பட மாவட்டத்தின் தொலைதூர ஊர் களில் இருந்து இம்முகாமிற்காக மாற்றுத்திறனாளிகள் சிரமப் பட்டு வருகின்றனர். குழுவாகச் சேர்ந்து தனியாக வாகனம் ஏற் பாடு செய்து ரூ.2ஆயிரம் வரை வாடகை செலுத்தி மருத்துவ மனைக்கு வருகின்றனர். இங்கு வந்தால் மருத்துவர் இல்லாமல் ஏமாற்றம் ஏற்படுகிறது. மேலும் கால விரயமும், பண விரயமும் ஏற்படுவது மிகுந்த மன உளைச் சலை ஏற்படுத்துகிறது.

காலை முதல் மதியம் வரை காத்திருந்து பசியுடன் மீண்டும் தங்கள் ஊர்களுக்கு நெடுந்தூ ரம் திரும்பிச் செல்ல முடியாத நிலையில் வெளியே உணவகங் களுக்கும் செலவிட வேண்டிய நிலை ஏற்படுகிறது. பெரும்பாலும் ஏழ்மையிலும், நிராதரவான நிலையிலும் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்படும் இந்த துயரத்தை மருத்துவமனை நிர் வாகம் அலட்சியப்படுத்துவது கண்டனத்துக்கு உரியது. எனவே வாரந்தோறும் வெள் ளிக்கிழமை முகாமில் உரிய மருத் துவர்கள் தவறாமல் பங்கேற்று மாற்றுத் திறனாளிகளுக்கு பரி சோதனை செய்து சான்றிதழ் அளிப்பதை உறுதிப்படுத்த வேண் டும். மருத்துவர் வருகை தரும் நேரம், முகாமில் எவ்வளவு நேரம் பரிசோதனை செய்வதற்காக அவர்கள் இருப்பார்கள் என்பது  போன்ற விபரங்களை அங்கு வரும் மாற்றுத் திறனாளிகளுக்குத் தெரிவிப்பதற்கும் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும். அடுத்த வாரம் நரம்பியல் மருத்துவர் உள்பட தொடர்புடைய மருத்துவர்கள் முகாமுக்கு வராவிட்டால் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் சார்பில் அனைத்துத் தரப்பினரைத் திரட்டி மிகப்பெரும் போராட்டம் நடத்து வோம் என்றும் ரமேஷ் எச்ச ரிக்கை விடுத்தார்.

;