செய்யூர், நவ. 08- செய்யூர் அரசு வட்டார மருதது வமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை மற்றும் இடிந்து விழும் கட்டடத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தின் தென் கிழக்கு எல்லையாகவும், வங்கக் கடலை ஒட்டிய கிழக்கு கடற்கரைச் சாலையை சார்ந்த பகுதி செய்யூர் வட்டம். கடந்த 1986இல் மதுராந்தகம் வட்டத்தில் இருந்து செய்யூர் தனி வட்டமாகப் பிரிக்கப்பட்டது. இப்பகுதி கடலையொட்டி அமைந்துள்ளதால் அதிகளவில் மீனவர்கள் வாழ்ந்து வரு கின்றனர். மீன்பிடித் தொழில். விவசா யம், உப்பளத் தொழில் ஆகியவை இப்பகுதி மக்களின் பிரதான தொழி லாக உள்ளது. செய்யூர் வட்டத்தில் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம், லத்தூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் இடைக் கழிநாடு பேரூராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. ஊராட்சி ஒன்றியத்தில் 84 கிராம ஊராட்சிகளும், இடைக்கழிநாடு பேரூராட்சியில் 24 வார்டுகளும் அமைந்துள்ளன. சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர் .
மருத்துவ வசதி
செய்யூர் வட்டத்தில் உள்ள அரசு வட்டார தலைமை மருத்துவமனையில் 50 படுக்கைகள், பொலம்பாக்கம், பவுஞ் சூர், கூவத்தூர், சூனாம்பேடு ஆகிய பகுதிகளில் சுமார் 30 படுக்கைகளை கொண்ட, சிறிய அளவிலான ஆரம்ப சுகாதார மருத்துவமனைகள் செயல்படு கின்றன. இந்த மருத்துவமனையில் போதிய மருத்துவர்களும், செவிலி யர்களும் இல்லை. போதுமான மருத்துவ உபகரணங்களும் இல்லை. சென்னை நாகர்கோவில் கிழக்கு கடற்கரைச் சாலை, மதுராந்தகம் புதுச்சேரி சாலை போன்ற முக்கிய சாலைகளின் அருகே செய்யூர் அரசு வட்டார தலைமை மருத்துவமனை உள்ளதால், சாலை விபத்துகளின் போது பலத்த காயம் அடைந்தவர்க ளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான வசதிகள் இந்த மருத்துவமனையில் இல்லை. அதனால் விபத்தில் சிக்கி யவர்கள் சிகிச்சைக்காக செங்கல் பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதால், அவர்களில் பெரும்பாலானோர் மருத்துவமனை செல்லும் முன் அவசர ஊர்தி வாகனத் திலேயே இறந்து விடும் நிலை உள்ளது.
மருத்துவர்கள் பற்றாக்குறை
செய்யூர் வட்டார தலைமை மருத்து வமனையில் 10 மருத்துவர்கள், இருக்க வேண்டிய மருத்துவமனையில் 4 மருத்துவர்கள் மட்டுமே தற்போது பணியில் உள்ளனர். இதிலும் அருகில் உள்ள தொழுநோய் மருத்துவமனை யிலிருந்து மருத்துவர்கள் வாரத்தில் ஒரு நாள் வந்து பணி செய்யும் நிலை உள்ளது. மேலும் 6 தூய்மை பணியாளர்கள் பணி செய்ய வேண்டிய இடத்தில் இருவர் மட்டுமே உள்ளனர். அதில் ஒருவர் அடுத்த ஆண்டு ஓய்வு பெறுகிறார். இதே போன்று கட்டு கட்டும் பணியாளர்கள் 5 பேர் பணி செய்ய வேண்டிய இடத்தில் இருவர் மட்டுடே பணி செய்து வருகின்றனர். இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்ற னர்.
இடிந்து விழும் நிலையில் மருத்துவமனை கட்டிடம்
மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் மருந்து வழங்கும் கட்டிடம் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. தற்போது இந்த கட்டடம் மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த கட்டடத்தில் மருந்தகம், ஊசி போடும் இடம், பெண்களின் மார்பக பரிசோ தனை மையம் உள்ளிட்ட மருத்துவ மையங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் கட்டடம் முழுவதும் தண்ணீர் ஊறி மேற்கூரை இடிந்து விழுந்து வருகிறது. மேலும் மருத்து வமனை வளாகத்தில் செயல்படும் மற்ற கட்டடங்களும் சேதமடைந்துள்ள தால் மழை நீர் மேற்கூரையில் இருந்து கசிகிறது.
செயல்படாத ஸ்கேன்
அங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட புதிய ஸ்கேன் மையமும் தொடர்ந்து மூடிய நிலையி லேயே இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதே போல் குளிரூட்டப்பட்ட பிணவறை தற்பேது செயல்படாமல் சிதலமடைந்து காணப்படுகிறது. இதனால் இங்கு உயிரிழக்கும் நபர்களின் உடல்கள் 30 கிலோ மீட்டர் தூரம் உள்ள மதுராந்த கம் அரசு வட்டார மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நிலை உள்ளது. இதுகுறித்து மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலர் ஸ்ரீதரிடம் கேட்ட போது, தொடர்ந்து மருத்துவர்கள், பணியாளர்கள் பற்றாக் குறை குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையால் மருத்துவமனையில் உள்ள மருத்து வர்கள், பணியாளர்களை வைத்தே பணிகளை செய்ய வேண்டியுள்ளது. மருந்தகம் உள்ள கட்டடம் மிகவும் பழைமையான கட்டடம் இதை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். மேலும் இதுகுறித்து செய்யூர் சட்ட மன்ற உறுப்பினர் பனையூர். மு.பாபு விடம் கேட்டபோது மருத்துவமனை யில் பழுதாகியுள்ள கட்டடங்களை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டவும், இதய நோய் பிரிவு, தலை காயப்பிரிவு, நரம்பில் துறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் செய்யூர் வட்டார தலைமை மருத்துவமனையை தரம் உயர்த்த ரூபாய் 2.20 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் மாவட்ட ஆட்சியரின் மேற் பார்வையில் நடைபெற்று வருகிறது. கிழக்கு கடற்கரை சாலையின் அருகில் உள்ள இம் மருத்துவமனை அடுத்த ஆண்டுக்குள் தரம் உயர்த்தப்படும் என தெரிவித்தார்.