tamilnadu

தருமபுரி ,சேலம் முக்கிய செய்திகள்

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு பெயர் மாற்றம்

தருமபுரி, செப்.6- தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு “மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையம்’ என தமிழக அரசால் பெயர் மாற்றம் செய் யப்பட்டுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களின் முக்கிய நோக்கம், படித்த இளைஞர்களின் கல்வித் தகுதியை பதிவு  செய்தல், வேலைவாய்ப்பு மற்றும் அரசுப் பணிகளுக்கு வேலையில்லா இளைஞர்களின் கல்வித் தகுதி விவரங் களை வழங்குதல், போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வழங் குதல் ஆகியவை ஆகும். தற்போது, இத்துறையின் மூலம்  திறன்பயிற்சி, போட்டித் தேர்வுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு குறித்து ஊக்கப்படுத்துதல் போன்ற பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.  மேலும், மத்திய, மாநில அரசால் அறிவிக்கப்படும் போட்டித் தேர்வுகளுக்கு கல்லூரி பேராசிரியர்கள், துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு தன்னார்வ பயிலும் வட்டத்தில் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. கண் காட்சி மற்றும் கருத்தரங்குகள் மூலம் பள்ளி, கல்லூரி  மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புக்கான வழிகாட்டுதலும் மேற்கொள்ளப்படுகிறது.  இந்நிலையில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம்  இளைஞர்களுக்கு போட்டித் தேர்வு பயிற்சி வழங்கப் படுவது குறித்து, பொதுமக்கள் அதிகளவில் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் என்பதை “மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்’ என தமிழக அரசால் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட இளைஞர்கள் இம்மையத்தை தொடர்புகொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வரதட்சணை கொடுமை: 7 பேர் மீது வழக்குப் பதிவு

தருமபுரி, செப்.5- தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு பார்வதி (29) என்ற பெண்ணுடன் கடந்தாண்டு திருமண மானது. இந்தநிலையில் பிர காசும், அவரது தாயார் இந்தி ராவும் சேர்ந்து பார்வதிக்கு வரதட்சணை கேட்டு கொடுமை செய்துள்ளனர்.  இதுதொடர்பாக பார்வதி அவரது கணவரின் குடும்பத்தார் மீது அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சணை கொடுமை செய்ததாக புகார் செய்தார். இதையடுத்து காவல்துறையினர் பிரகாஷ் குடும்பத்தினர் 7  பேர் மீது வழக்குப் பதிவு செய்து, பிரகாஷ் மற்றும் இந்திராவை கைது செய் தனர்.

மின்தடை

சேலம், செப்.6- சங்ககிரி அருகே ஐவேலி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனியன்று (செப்.7) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது என சங்ககிரி மின் வாரியச் செயற்பொறியாளர் கே.பாலசுப்ரமணியம் தெரி வித்துள்ளார். இதன்படி சங்ககிரி நகர், சங்ககிரி ரயில் நிலையம், தேவண்ணகவுண்டனூர், சுண்ணாம்புகுட்டை, ஐவேலி, ஒலக்கசின்னானூர், தங்காயூர், அக்கமாபேட்டை, வடுகப் பட்டி, இடையப்பட்டி, வளையசெட்டிப்பாளையம், ஆவரங் கம்பாளையம், வைகுந்தம், இருகாலூர், வெள்ளையம் பாளையம் மற்றும் காளிகவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.