tamilnadu

அதிகாரிகள் இன்றி காலியாய் கிடக்கும் பட்டு வளர்ச்சித்துறை

உதவிகள் கிடைக்காமல் விவசாயிகள் அவதி

கோவை, அக்.21- கோவை மாவட்ட பட்டு வளர்ச் சித்துறையில் இளநிலை ஆய்வா ளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் கள் பணியிடங்கள் காலியாக இருப்பதால் தேவையான உதவி கள் கிடைக்காமல் பட்டு விவசாயி கள் அவதியடைந்து வருகின் றனர். கோவை பாலசுந்தரம் சாலை யில் பட்டு வளர்ச்சித்துறை அலு வலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் கீழ்  கோவை, அன்னூர், பெரியநாயக் கன்பாளையம் மற்றும் அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில் தொழில் நுட்ப சேவை மையங்கள் செயல் பட்டு வருகின்றன. இந்த அலுவ லகங்களில் தலா ஒரு உதவி பட்டு ஆய்வாளர் பணியில் இருக்க வேண்டும். ஆனால், கோவை மற்றும் அவிநாசியில் உள்ள மையங்களில் இந்த பணியிடங் கள் பல ஆண்டுகளாக நிரப்பப் படாமல் காலியாக உள்ளது. இதே போல், ஒவ்வொரு தொழில்நுட்ப சேவை மையத்திலும் உதவி பட்டு ஆய்வாளருக்கு கீழ் 6 முதல் 7 இள நிலை பட்டு ஆய்வாளர்கள் பணியி டங்கள் உள்ளன. இந்த இளநிலை பட்டு ஆய்வாளர்கள் அவ்வப் போது பட்டு விவசாயிகளை  சந் தித்து பட்டு மகசூல் ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கவும், மல்பெரி நாற்றுகளை பூச்சி தாக்குதலில் இருந்து பாது காக்கும் வழிமுறைகளை கற்றுக் கொடுக்கவும் நியமிக்கப்படு கின்றனர்.

ஆனால், கோவையில் உள்ள  4 தொழில்நுட்ப சேவை மையங் களிலும் உள்ள பெரும்பாலான பணியிடங்கள் காலியாகவே உள் ளன. இதனால் விவசாயத்திற்கு தேவையான உதவிகள், மானி யம் பெறுவது தொடர்பான ஆலோ சனைகள் கிடைக்காமல் விவ சாயிகள் அவதியடைந்து வருகின் றனர். பட்டு வளர்ச்சித்துறை  அதி காரிகளால் இந்த பணியிடங்களை நிரப்பாமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளதால், விவசாயிக ளுக்கு தேவையான ஊக்கம் முழுமையாக கிடைப்பதில்லை. இதனால், கோவை மாவட்டத்தில் பட்டு விவசாயத்தின் சாகுபடி பரப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.  இதுகுறித்து பட்டு விவசாயி கள் தரப்பில் கூறுகையில், கோவையில் சுமார் 85 ஆயிரம் ஏக்கரில் தென்னை விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், சுமார் 2 ஆயிரம் ஏக்க ரில் மட்டுமே பட்டு விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மற்ற விவசாயத்தை போல் பட்டு விவசாயம் அதிக சாகுபடி பரப்பை கொண்டது அல்ல. இருந்த போதிலும், எங்களுக்கு முழுமையான உதவிகள் கிடைப்ப தில்லை. இதுகுறித்து கேட்டால் ஆட்கள் பற்றாக்குறை என்று பட்டு வளர்ச்சித் துறையினர் தெரி வித்து வருகின்றனர். தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட விலை யில்லா உபகரணங்கள் கூட எங்க ளுக்கு தாமதமாகவே வழங்கப் பட்டது. மேலும், கோவையில் உதவி இயக்குநர் பணியிடம் கூட பல மாதங்களாக காலியாக உள்ளது. பிற மாவட்டத்தை கவனிக்கும் ஓர்  உதவி இயக்குநர் இங்கு பொறுப்பு அடிப்படையில் நியமிக்கப்பட் டுள்ளார். இந்த விசயத்தில் மெத்த னப்போக்கை கடைபிடிக்காமல் பட்டு விவசாயத்தை பாதுகாக்க உயர் அதிகாரிகள் மற்றும் தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

(ந.நி)