tamilnadu

கோவை மாநகரக் காவலர்களை மிரட்டும் கொரோனா

கோவை, ஜூலை 14- கோவை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் காவலர் ஒருவ ருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களுக்கு காவலர்கள் தவிர்த்து வெளியாட்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கபட்டுள் ளது.

கோவையில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிக ரித்து வருகிறது.

இந்நிலையில், ஞாயி றன்று துடியலூர் மற்றும் போத்தனூர்  காவல் நிலைய காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தபட்ட நிலையில்.  கோவை மாநகர காவல் ஆணையர் அலு வலகத்தில் குற்றபிரிவில் பணியாற்றும் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுது செய்யப்பட்டுள்ளது. இதனால் குற்றப்பிரிவு அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

மேலும், மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள இதர பிரிவு காவல் துறையினர்கள் தவிர வேறு யாரும் உள்ளே வருவதற்கு அனுமதி மறுக் கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, அலு வலகத்தில் பணிபுரியும் மற்ற காவலர்க ளுக்கு கொரோனா பரிசோதனை மேற் கொள்ளும் பணியில் சுகாதாரத்துறையி னர் ஈடுபட்டுள்ளனர். அதிவிரைவு படையினருக்கு கொரோனா இதேபோல், கோவை வெள்ளலூர் பகு தியில் வசித்து வரும் அதிவிரைவு படையி னர் மூவர் வேலூர், விருதுநகர், மகாராஷ் டிரா பகுதிகளுக்கு சென்றுவிட்டு கடந்த 9 ஆம் தேதி பணிக்கு திரும்பியுள்ளனர். இந்நி லையில், அவர்களுக்கு கொரோனா பரிசோ தனை மேற்கொள்ளபட்டது.

அதில் மூவ ருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக இஎஸ்ஐ மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டனர்.