tamilnadu

கோவை: பிரதமர் கிசான் திட்டத்தில் ரூ.30 லட்சம் முறைகேடு பயனாளிகளின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்ய உத்தரவு

கோவை, செப்.10–  பிரதமரின் கிசான் திட்டத்தில் கோவை மாவட்டத்தில் 30 லட்சம் ரூபாய் முறைகேடு நடைபெற் றுள்ளது அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து இத்திட்டத்தின் பயனாளிகள் அனைவரின் வங்கி கணக்குகளையும் ஆய்வு செய்ய வருவாய்த்துறை மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் ஈடு பட்டுள்ளனர்.  பிரதான் மந்திரி கிசன் சம் மான் நிதி என்கிற பெயரில் சிறு குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் என மூன்று தவணைகளில் ஊக்க தொகை அளிக்கும் திட்டம் மத்திய அர சால் அறிவிக்கப்பட்டது. இத்திட் டத்தின்படி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரிடையாக பணம் செலுத்தப்படும். இந்நிலை யில், விவசாயிகள் அல்லாதோர் அதிகாரிகளின் துணையுடன் முறைகேடாக பணத்தை பெற்று  வருவதாக குற்றச்சாட்டு எழுந் தது. இதுகுறித்து  தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் உள்ளிட்டோரின் தொடர் போராட்டத்தினைத் தொடர்ந்து நடைபெற்ற விசா ரணையில் திருவண்ணாமலை, கடலூர், தஞ்சை என பல்வேறு மாவட்டங்களில் கோடிக்கணக் கான ரூபாய் மோசடி நடைபெற் றது தெரியவந்தது.  இந்நிலையில், கோவை மாவட்டத்திலும் இத்தகைய முறைகேடு நடைபெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது. இதுகு றித்து மாவட்ட ஆட்சியர் அலுவ லக அதிகாரிகள் சிலர் கூறுகை யில், பிரதமர் கிசான் திட்டத்தில் உண்மை பயனாளிகளை தாண்டி மோசடியாக பலருக்கு இத்திட் டத்தின் பணப்பயன்கள் சென்ற டைந்துள்ளது. குறிப்பாக அரசு ஊழியர்கள், உள்ளாட்சி பிரதி நிதிகள், ஒரே ரேசன் அட்டை யில் இரு பயனாளிகள், வரி செலுத்துபவர்கள், வெளியூரில் நிலம் வைத்திருப்பத்திருவர்கள் இங்குள்ள வங்கி கணக்கில் பணம் பெற்றது போன்ற தகுதியில்லாத வர்களுக்கு இந்த பணம் சென்ற டைந்துள்ளது.  கோவை மாவட்டத்தில் மொத்தம் 66 ஆயிரத்து 647 பேர் பயனாளிகள்.

இவர்களில் தகுதியில்லாத 762 பேர் வங்கி கணக்குகளுக்கு இரண்டாயி ரம் ரூபாய் என இரண்டு தவணை களாக ரூ.30 லட்சத்து 48 ஆயிரம் சென்றுள்ளது.  தற்போது இந்த 762 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் வருவாய்த் துறை மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் இத் திட்டத்தின் மூலம் பணப்பயன் கள் அடைந்தவர்களின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்து வரு கின்றனர். இதற்காக முதன்மை வங்கியின் அதிகாரிகளின் உதவி யோடு இந்த ஆய்வை மேற் கொண்டு வருகின்றனர். இதில் தற்போதுவரை சுமார் 12 லட்சம் ரூபாய் பணம் வசூலிக்கப்பட்டுள் ளது என தெரிவித்தனர்.  பிரதமர் கிசான் திட்டத்தில் கோவை மாவட்டத்தில் நடை பெற்றுள்ள  முறைகேடு சம்பவம் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

;