தொடர் மழை எதிரொலி கோவை குற்றாலம் மூடல்
கோவை, அக்.18- தொடர் மழையின் காரணமாக கோவை குற்றாலம் அருவி வெள்ளியன்று மூடப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக கோவை குற்றாலம் அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அருவில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மழையின் அளவை பொறுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடை நீடிக்கப்பட வாய்ப்புள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தரைப்பாலம் மூழ்கியது
வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே துவங் கியுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மதுக்கரை அருகேயுள்ள குமிட்டிபதி பகுதியில் வியாழனன்று இரவு கனமழை பெய்தது. இதனால், மஞ்சள் பள்ளம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், குமிட்டிபதி - க.க.சாவடி செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், குமிட்டிபதி, குட்டிகவுண்டபதி, மாரிசெட்டிபதி, க.க.சாவடி, பிச்சனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள், பல கிலோ மீட்டர் சுற்றி மாற்றுப்பாதையில் சென்று வருகின்றனர்.இதனையடுத்து, சேதமடைந்த தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்
நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
திருப்பூர், அக். 18- வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கோவை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் திருப்பூர் பகுதிக ளில் பெய்த மழையால் தற்போது திருப்பூரின் பிரதான ஆறான நொய் யலில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது. கரை யோர மக்களை பாது காப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறி விப்பு செய்துள்ளது.