tamilnadu

திருப்பூர் , தாராபுரம் முக்கிய செய்திகள்

ஜம்மனை ஓடை அருகே வசிக்கும் மக்கள் தடுப்புச் சுவர் கட்டித் தரக் கோரிக்கை

திருப்பூர், ஆக. 5 – திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பின்புறம் ஜம் மனை ஓடை அருகே ராம்ராஜ் நகரில் வசித்து வரும் மக்கள் தற்போது இருக்கும் இடத்திலேயே மழை காலத்தில் ஆற்றுநீர் புகாமல் தடுக்க, தடுப்புச் சுவர் அமைத்துக் கொடுக்கும்படி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்க ளன்று வாராந்திர மக்கள் குறை தீர்க் கூட்டம் நடைபெற் றது. இதில் ராம்ராஜ் நகர் பகுதி பெண்கள் சுமார் 50 பேர்  மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதா வது: இப்பகுதியில் சுமார் 60 ஆண்டுகள் மூன்று தலைமுறை களாக வசித்து வருகிறோம். குடிசை மாற்று வாரிய அதிகா ரிகள் சில மாதங்களுக்கு முன்பு அங்கு வந்து தனித்தனி வீடு கள் கட்டித் தருவதாக சொன்னார்கள். பின்பு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு தருவதாகவும், ஒரு குடும்பத்துக்கு ரூ.1.20 லட்சம் பணம் செலுத்தும் படியும் கேட்டனர். ஆனால் நாங் கள் வேறெங்கும் செல்ல விரும்பவில்லை. எனவே இதே  இடத்தில் வாழ அனுமதிக்க வேண்டும். மழை காலங்களில் ஆற்றுநீரைத் தடுக்க தடுப்புச் சுவர் கட்டிக் கொடுத்தால் போதும் என்றும் கூறியுள்ளனர்.

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவமுகாம்  ,கடனிலிருந்து விடுதலை

திருப்பூர், ஆக. 5- மாற்றுத்திறன் கொண்ட பிறப்பு முதல் 18 வயது வரையுள்ள குழந்தைகளுக்கான மருத்துவமுகாம் சார்ந்த விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் திருப்பூர்  மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் நடைபெறவுள் ளது.  இம்மருத்துவ முகாமில் கண் மருத்துவர், காது மூக்கு தொண்டை நிபுணர், முடநீக்கியல் மருத்துவர், உளவியல் நிபுணர், குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் மனநல மருத்து வர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் அவர்களால் வழங் கப்படவுள்ளது. இம்மருத்துவ முகாம் திருப்பூர் மாவட்டத் தில் உள்ள 13 ஒன்றியங்களிலும் தனித்தனி கால அட்ட வணைப்படி நடத்தப்பட உள்ளது. அன்னப் பிளவு மற்றும் உதட்டுப் பிளவு அறுவை சிகிச்சை பற்றிய விவரங்களை பங்கேற்பாளர்களுக்கு அளிக்கவுள்ளனர்.  மருத்துவ முகாமில் கண்டறியப்பட்ட அறுவை சிகிச்சை  தேவையுள்ள மாணவர்களுக்கு அரசு மருத்துவமனை மூலமாகவும், முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட் டுத் திட்டம் மூலமாகவும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட உள்ளது. மருத்துவ முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு போக்குவரத்து பயணப்படி, தேநீர், சிற்றுண்டி மற்றும் மதியஉணவு வழங்கப்படவுள்ளது. இம் மருத்துவ முகாமானது முதற்கட்டமாக குண்டடம் வட்டார வள மையம், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வரும் 6ஆம் தேதியும், அரண்மணைப்புதூரில் உள்ள திருப் பூர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 7ஆம் தேதியும்,  தாராபு ரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வரும் 8ஆம் தேதியும், பல்லடம் ஊ.ஒ.ந.நி.பள்ளியில் 9 ஆம் தேதி யும், மூலனூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வரும் 13ஆம் தேதியும் நடைபெறும்.                            எனவே மருத்துவ முகாமில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

 விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை

விவசாய சட்டங்களை நிறைவேற்ற குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை

திருப்பூர், ஆக. 5 – விவசாயிகளை கடனிலிருந்து விடு விக்கவும், விளைபொருட்களுக்குக் குறைந் தபட்ச ஆதரவு விலை கிடைக்க வேண்டும் என்ற இரு சட்டங்களை இந்தியக் குடியரசுத் தலைவர் நிறைவேற்றித் தரும்படி விவசா யிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள் ளனர். இதுதொடர்பாக திங்களன்று அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கி ணைப்புக் குழு சார்பில் தமிழ்நாடு விவசா யிகள் சங்க திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க (சிபிஐ) மாவட்டச் செயலாளர் எஸ்.சின் னச்சாமி, உழவர் உழைப்பாளர் கட்சியின் மாவட்ட இளைஞரணி தலைவர் ப.சோம சுந்தரம் ஆகியோர் கையெழுத்திட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வழியாக குடியர சுத் தலைவருக்கு கடிதம் அளித்தனர். இதில் கூறப்பட்டுள்ளதாவது: நமது நாட்டு விவசாயிகள் கடுமையான விவசாய நெருக்கடியில் சிக்கி தவிக்கிறார்கள் என் பதை அறிவீர்கள். விவசாய உற்பத்தி  செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்க ளுக்கு குறைந்தபட்ச கட்டுப்படியான விலை  கிடைக்காமல் அவதியுறுகின்றனர். இத னால் விவசாய தொழில் நடைமுறை சாத்தி யமற்றதாகி, விவசாயிகள் கடன் சுமை யில் தள்ளப்பட்டு, விரக்தியில் வலுக்கட் டாயமாகத் தற்கொலைக்குத் தள்ளப்படு கின்றனர். 1995க்கு பிறகு 3.5 லட்சத்திற் கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். பல்வேறு விவசாய சங்க அமைப்புக ளின் தலைவர்கள் தங்களை சந்தித்தபோது அந்த குழுவிடம், உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி விவசாயிகள் விடுதலைச் சட்டத்தை, அதாவது கடன் தொல்லையில் இருந்து விவசாயிகள் விடுதலை சட்டம் 2018 மற்றும் விவசாய உற்பத்தி பொருட்க ளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை விவசாயிகளுக்கு உத்தரவாதம் செய்யும் சட்டம் 2018 ஆகியவற்றை அமல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து இருந்தீர்கள்.  இந்த மசோதாக்கள் 2017ஆம் ஆண்டு நவம்பர்-20ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் ராஜுஷெட்டியும், மாநிலங்களவையில் கே.கே.ராகேஷூம் தனி நபர் மசோதாவாக இதை அறிமுகம் செய்தனர். இதனை நிறை வேற்ற நாடு முழுவதும் ஆயிரக்கணக் கான விவசாயிகள் ஒன்றிணைந்து மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் மூலமாக குடியரசுத் தலைவர் தலையீடு கோரி இம்மனு அனுப் பப்படுகிறது.

இரவில் மின்தடையால் பொதுமக்கள் அவதி

தாராபுரம், ஆக. 5 - தாராபுரத்தில் இரவில் மின்தடை செய்யப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தாராபுரத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து விட்டு, விட்டு மின்தடை ஏற்பட்டு வருகிறது. இப்பகுதி யில் காற்றாலைகள் மூலம் மின்சாரம் அதிகளவு உற்பத்தி யாகும் நிலையிலும், அறிவிக்கப்படாத இந்த மின்தடை யால் தொழிற்சாலைகள், அச்சகம், சிறு பனியன் கம்பெனி கள் உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்கள் பாதிப்படை கின்றன.  மேலும், மாணவர்கள், பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், ஞாயிறன்று இரவு விட்டு, விட்டு மின் தடை ஏற்பட்டது. இதன்பின் திங்களன்று அதிகாலை 2 மணிக்கு மின்தடை ஏற்பட்டு,  அதிகாலை 5.45 மணிக்கு  மீண்டும் மின்விநியோகம் செய்யப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கையில், தாராபுரம் நீருந்து நிலைய மின்இணைப்பில் பழுது ஏற்பட்டதை சரி செய்வதற்காக தாராபுரம் நகரில் மின்சாரத்தை நிறுத்தி பழுது பார்க்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடு பட்டனர் என தெரிவித்தனர்.  ஆனால் அந்த பணிகள் முடிவடைந்த பிறகு, துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் காலை 9 மணியிலிருந்து விட்டு விட்டு மின்தடை இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.