tamilnadu

img

கோவை - ரூ.40 கோடிக்கு மது விற்பனை

கோவை, அக். 28-   கோவை மாவட்டத்தில் மட்டும் தீபாவளி பண்டிகை யையொட்டி கடந்த 3 நாட்க ளில் சுமார் ரூ.40 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியுள்ளது. தீபாவளி பண்டிகை யையொட்டி மதுபான விற் பனைக்கு தமிழக முதல்வர் டாக்டர் பழனிசாமி இலக்கு நிர்ணயித்திருந்தார். இதனையொட்டி கோவை  வடக்கு மாவட்டத்தில் 159 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின் றன. இதில் கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு (தீபாவளி தினத்தன்று) என மூன்று நாட்களில் ரூ.21 கோடியே 25 லட்சத்திற்கு  மது விற்பனை ஆகியுள்ளது. வெள்ளிக் கிழமை ரூ.6 கோடிக்கும், சனிக்கிழமை ரூ.8.25 கோடிக்கும், ஞாயிற்றுக்கிழமை ரூ.7 கோடி என மொத்தம் ரூ.21.25 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது.   இதில் பொள்ளாச்சி உள்ளடக்கிய தெற்கு மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற் பட்ட கடைகள் உள்ளன. இதில் சுமார் ரூ.20 கோடிக்கு மது விற்பனை செய்யப் பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இவ் வாறு கடந்த மூன்று தினங்களில் மட்டும் கோவை மாவட்டத்தில் ரூ 40 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள் ளன.   கடந்த ஆண்டு தீபாவளி விற்பனை யைவிட இந்த ஆண்டு கோவை வடக்கு மாவட்டத்தில் ரூ.1 கோடிக்கு அதிகமாக மது விற்பனை ஆகியுள்ளது. தமிழக அரசின் திட்டங்கள் நடைமுறைப்படுத்த எடுக்கும் முனைப்புகள் எந்த அளவு சாத்தியமாகியி றதோ இல்லையோ. ஆனால் மதுபான விற்பனை மட்டும் இலக்கை தாண்டி உச் சத்திற்கு செல்வதாக சமூக ஆர்வலர்கள் நொந்து கொண்டனர்.

;