சென்னை:
தமிழகத்தில் கடந்த 4 நாட்களில் ரூ.800 கோக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் முழுமையாக மூடப்பட்டு, மற்ற நாட்களில் இரவு 9 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர தொற்று தீவிரம் அடைந்ததால் பார்களும் மூடப்பட்டுள்ளன.இந்த கட்டுப்பாடுகளின் காரணமாக டாஸ்மாக் கடைகளில் வழக்கமான விற்பனை குறைந்தாலும் சனிக்கிழமைகளில் அதனை ஈடு செய்யும் வகையில் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது.
மே 1 மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 2 ஆகிய தேதிகளில் மதுக்கடைகள் மூடப்படுகின்றன. வெள்ளிக்கிழமைகளில் பொதுவாக மது விற்பனை அதிகமாக இருக்கும். வார இறுதி நாளோடு தேர்தல் முடிவு மற்றும் மே தின விடுமுறை ஆகியவை இணைந்து வருவதால் மது விற்பனை அமோகமாக இருந்தது.கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை ரூ.800 கோடிக்கு அதிகமாக மதுவிற்பனை நடைபெற்றுள்ளது. 2 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படுவதால் கடைகளில் நெரிசல் இல்லாமல் வாங்கி செல்வதற்கு வசதியாக தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தேர்தல் கொண்டாட்டத்தை எதிர்கொண்டுள்ள கட்சியினர் பணத்தை பொருட்படுத்தாமல் மது பானங்களை மொத்தமாக வாங்கி இருப்பு வைத்துக்கொள்வதில் தீவிரமாக உள்ளனர்.