tamilnadu

img

அவிநாசியில் குழந்தைகள் அறிவியல் திருவிழா

அவிநாசி, ஜூலை 7- அவிநாசியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய குழந்தைகள் அறிவியல் திருவிழா சனி, ஞாயிறுகளில் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 20 வது மாநில மாநாடு திருப்பூர் மாவட்டம், சிறுபூலுவபட்டி அம்மன் மகாலில் ஆகஸ்ட் 9,11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அந்நிகழ்வை ஒட்டி திருப்பூர் மாவட்டம் முழு வதும் குழந்தைகளுக்கான அறிவியல் விழிப்புணர்வு  நிகழ்வுகளை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக அவிநாசி ஒன்றியத்தில் குழந்தைகள் அறிவியல் திரு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாணவர்களிடம்  சுற்றுச்சூழல் குறித்தும், வாசிப்பு பழக்கத்தை மேம்படுத் துவது குறித்தும் குறும்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டது.  அப்படங்கள் குறித்து மாணவர்களும் தங்கள் கருத்து களை பகிர்ந்து கொண்டனர். கதை உருவாக்கம், செய்தித் தாள் வடிவமைப்பு, கதைகூறுதல் மற்றும் காகித மடிப்புக்கலை உள்ளிட்ட பல நிகழ்வுகளும் இடம் பெற் றன. இந்நிகழ்வுகளை அவிநாசி தமிழ்நாடு அறிவியல் இயக்க செயலாளர் ச.மு.ரமேஷ்குமார் ஒருங்கிணைத்தார். அறிவியல் திருவிழாவில் மாவட்ட கருத்தாளர்களும், பெற்றோர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.