tamilnadu

img

கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தையில் ரூ.2 கோடிக்கு கால்நடைகள் விற்பனை

ஈரோடு, மே 9-ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தையில் ரூ.2.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனையானதாக மாட்டு சந்தை மேலாளர் தெரிவித்தார்.ஈரோடு, கருங்கல்பாளையம் அருகே வாரந்தோறும் புதன், வியாழன் ஆகிய இரு நாட்களில் மாட்டுச்சந்தை கூடுகிறது. இதில், புதன்கிழமை வளர்ப்பு மாடுகளும், வியாழக்கிழமை கறவைப் பசு மாடுகளும், எருமை மாடுகள், வளர்ப்பு கன்றுக்குட்டிகளும் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர், திண்டுக்கல், கோவை, கரூர்உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்துவிவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து செல்கின்றனர். அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் வருகின்றனர். வாரந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் இச்சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற சந்தைக்கு பிற மாநில வியாபாரிகளும் முழுமையாக வரவில்லை. மாடுகள் வரத்தும் குறைந்தேகாணப்பட்டது. எனினும், பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் விவசாயிகளின் வருகை கணிசமான எண்ணிக்கையில் இருந்தது.இது குறித்து, மாட்டுச்சந்தை  மேலாளர் ஆர்.முருகன் கூறுகையில், வட மாநிலத்தை சேர்ந்த வியாபாரிகளுக்கு ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களில் மாடு வளர்ப்பிற்கான கடன் வழங்கப்படுகிறது. இதனால் இவ்வியாபாரிகள் வரவில்லை. மேலும், விவசாய கோரிக்கைகள் தொடர்பாக போராட்டம் நடைபெறுவதால் பிற மாநில விவசாயிகளும், வியாபாரிகளும் வரவில்லை. மேலும் மாடுகள் வரத்தும்குறைந்தே காணப்பட்டது.இந்த வாரச் சந்தையில் 350 பசு மாடுகள், 200 எருமைகள், 150 வளர்ப்புக் கன்றுகள் விற்பனை செய்யப்பட்டன. இதில், பசுமாடு ரூ.16 ஆயிரம் முதல் ரூ.33 ஆயிரம் வரையிலும், எருமை மாடு ரூ.18 ஆயிரம் முதல் ரூ.34 ஆயிரம் வரையிலும், வளர்ப்பு கன்றுகள் ரூ.2 ஆயிரம்  முதல் ரூ.12 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. இதில், மொத்தமாகரூ.2.1 கோடிக்கு மாடுகள் விற்பனை நடந்துள்ளது என்று கூறினார்.


;