மேட்டுப்பாளையத்தில் கொடுந்துயரத்தில் பலியானோருக்கு கோவை புலியகுளம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொது செயலாளர் யு.கே.சிவஞானம், சிபிஎம் கோவை கிழக்கு நகர செயலாளர் என்.ஜாகீர், நகரக்குழு உறுப்பினர் த.நாகராஜ் மற்றும் வழக்கறிஞர் ஆனந்தன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.