tamilnadu

img

பாலிசிதாரர்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை ரத்து செய்திடுக எல்ஐசி முகவர்கள் தர்ணா போராட்டம்

கோவை, அக். 16- ஐஆர்டிஏ பரிந்துரைத்துள்ள கமிஷன் உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி எல்ஐசி முகவர்கள் கோவை யில் புதனன்று தர்ணா பேராட் டத்தில் ஈடுபட்டனர்.  அனைத்து முகவர்களுக்கு ரூ.18 ஆயிரம் குறைந்தபட்ச மாத ஊதியமாக வழங்கிட வேண்டும்.  பணிக்கொடை கணக்கிடும் முறையை மாற்றி ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கிட வேண்டும்.  குழு காப்பீடு ரூ.25 லட்சமாக உயர்த்திட வேண்டும். எல்ஐசி பங்குகளை  பங்குச்சந்தையில் பட்டியலிடும் முன்மொழிவை கைவிடுக. பாலிசிதார்ர்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை ரத்து செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை திருச்சி சாலையில் உள்ள எல்ஐசி கோட்ட அலுவலகம்  வளாகத்தில் எல்ஐசி முகவர்கள் சங்கம் (லிகாய்) சார் பில் தர்ணா போராட்டம் நடை பெற்றது. இப்போராட்டத்திற்கு அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கம் (லிகாய்) கோட்ட தலை வர் எஸ்.கே.பிரேம்குமார் தலைமை தாங்கினார். கோட்ட  பொதுச்செயலாளர் ச.கோவர்த் தன் வரவேற்புரையாற்றினார். போராட்டத்தை துவக்கி வைத்து லிகாய் சங்கத்தின் தென்மண்டல பொருளாளர் ஏ.பூவலிங்கம் உரை யாற்றினார். இதில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் கோவை கோட்ட செயலாளர் துளசிதரன், வளர்ச்சி அதிகாரிகள் சங்க கோட்ட பொதுச்செயலாளர் கமல் தியாகராஜன், முதல்நிலை அதிகாரிகள் சங்க கோட்ட பொதுச் செயலாளர் நரசிம்மன் ஆகியோர் வாழ்த்துரை வழங் கினர். முடிவில், தர்ணா போராட் டத்தை நிறைவு செய்து சிஐடியு தமிழ் மாநில செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி உரையாற்றி னார். இதில் ஏராளமான எல்ஐசி  முகவர்கள் பங்கேற்று முழக்கங் களை எழுப்பினர்.

;