tamilnadu

கோவையில் அமலுக்கு வந்தது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு

கோவை, ஜூலை 25- கோவையில் எவ்விதத் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு சனியன்று மாலையிலிருந்து அமலுக்கு வந்தது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, கோவையில் சனிக்கிழமை (25.07.2020) மாலை 5 மணி முதல் திங்கள் கிழமை (27.07.2020) காலை 6 மணி வரை எவ்வித தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படு கிறது.

இந்த ஊரடங்கு காலத்தில் மருத்துவ சேவைகள், பால் மற்றும் மின்சாரம் போன்ற அத்தியாவசிய சேவைகள் மட் டும் அனுமதிக்கப்படும். வேறு எந்த நடவடிக்கைகளும் அனு மதிக்கப்படாது. ஊரடங்கினை மீறும் வகையில் தேவை யின்றி வெளியில் நடமாடுவோர் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும், வருவாய்த்துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, காவல் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பு அலு வலர்கள் மற்றும் பணியாளர்கள் பணியில் இருப்பர். உழவர் சந்தைகள், மார்க்கெட், மளிகைக்கடைகள், மீன் மார்க்கெட், பூ மார்க்கெட், இறைச்சிக் கடைகள், டாஸ்மாக் கடைகள், வர்த்தகத் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட எவ் வித அமைப்புகளும் இயங்காது.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளி தாகவும், விரைவாகவும் பரவும் தன்மையுள்ள நோய் என்ப தால், இதை முழுமையாகக் கட்டுப்படுத்த அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள், வணிகர்கள், தொழில் நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும், இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

;