திருப்பூர், மே 17- தமிழகத்தில் 18 பிஎஸ்என்எல் மாவட்டங்களை 11 ஆக குறைக்கும் வகையில் சில மாவட்டங்களை அருகாமை மாவட்டங்களுடன் இணைப்பதென்று பிஎஸ்என்எல் நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. இந்த முடிவுபிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களையும், ஊழியர்களையும் அலைக்கழிப்பதுடன், பிஎஸ்என்எல் சேவையை கடுமையாக பாதிக்கும் என்று பிஎஸ்என்எல் ஊழியர், அதிகாரிகள் சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.இம்முடிவினை கண்டித்து திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையம் முன்பாக வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.முகமது ஜாபர் தலைமை வகித்தார். இதில் என்எப்டிஇ சார்பில் ஜான் சாமுவேல், ஏஐபிஎஸ்என்எல்இஏ சார்பில் கேசவன் ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில உதவித் தலைவர் எஸ்.சுப்பிரமணியம் உரையாற்றினார்.