சேலம், செப்.16- உயிரிழந்த துப்புரவு பணியாளர் குடும்பத்தினருக்கு உரிய பண பலன்களை அளிக்காமல் லஞ்சம் கேட்டு அலைக்கழிக்கும் அதிகாரி கள் மீது நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தி அவரது குடும்பத்தார் சேலம் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாநகராட்சியில் இரண் டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இங் குள்ள சேலம் கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்த ஜோசப்சேட்டு என்பவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு உயிரி ழந்துள்ளார். இந்நிலையில், அவரது குடும் பத்தினருக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களையும், வாரிசு வேலையையும் வழங்க அதிகாரி கள் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டு அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் லஞ்சம் கேட்டு தங்களை அலைக்கழிக்கும் அதி காரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களுக்கு சேர வேண்டிய பண பலன்கள் கிடைத் திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அவரது குடும்பத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற் கொலைக்கு முயன்றனர். இதைய டுத்து ஆட்சியர் அலுவலக வளா கத்தில் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டிருந்த காவலர்கள் அவர்களை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.