tamilnadu

img

மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு, பத்திரப்பதிவு ஆய்வுத்துறையினர் திடீர் சோதனை

மே.பாளையம், செப்.18- மேட்டுப்பாளையம் சார்பதி வாளர் அலுவலகத்தில் லஞ்ச  ஒழிப்புத்துறை மற்றும் பத்திரப் பதிவு ஆய்வுத்துறையினர் நடத் திய திடீர் சோதனையில் மூன்று லட்சத்து முப்பத்துரெண்டாயிரம் ரூபாய் பறிமுதல் செயப்பட்டுள் ளது. கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் உள்ள சார்பதி வாளர் அலுவலகத்தில் புதனன்று பத்திரப்பதிவு பணிக்காக ஏராள மான பொதுமக்கள் காத்திருந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் பத்திரப்பதிவு ஆய்வுத் துறையினர் இணைந்து லஞ்ச  ஒழிப்புத்துறை டி.எஸ்.பி ராஜேஷ் தலைமையிலான குழு வினர் திடீரென அலுவகத்தினுள் நுழைந்த சோதனையினை துவங்கினர். இதில் மூன்று பெண் ஆய்வாளர்கள் உள்ளிட்ட எட் டுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் அலுவலக கதவை மூடி விட்டு  அங்கு யாரேனும் இடைத்தர கர்கள் உள்ளனரா என விசா ரணை நடத்தினர். பின்னர் பத்தி ரப்பதிவு பணிக்காக வந்திருந்த மக்களை தவிர அலுவகதினுள் இடைத்தரகர்களாக செயல்பட்ட நபர்களிடம் சோதனை நடத்தப் பட்டது. மேலும் அங்கிருந்த அலுவலர்களிடமும் சோதனை நடத்தப்பட்டது.  இதில் முதற்கட்டமாக லஞ்ச ஒழிப்புத்துறையினர், அலுவக தினுள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத மூன்று லட்சத்து முப்பத்துரெண்டாயிரம் ரூபாய்  பிடிபட்டது. பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது குறித்து மேட்டுப்பாளையம் சார்பதிவா ளர் அருணாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பத்திரப்பதிவு ஆய்வு  குழுவினர் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள ஆவணங் களை ஆய்வு செய்து வருகின்ற னர். மேட்டுப்பாளையம் சார்பதி வாளர் அலுவகலத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வரு வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இந்த சோதனை நடை பெற்று வருவதாகவும், ஆய்விற்கு  பின்னரே இது குறித்து முழுமை யாக தெரிய வரும் என அதிகாரி கள் தரப்பில் கூறப்படுகிறது.

;