districts

வேலூர் சிறையில் காவல்துறையினர் திடீர் சோதனை

வேலூர், மார்ச் 5- வேலூர் தொரப்பாடியில் மத்திய ஆண்கள் சிறை மற்றும்  பெண்கள் தனிச்சிறை உள்ளது. இங்கு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் உட்பட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் 700க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைக்குள் கைதிகள் கஞ்சா, செல்போன், புகையிலை பொருட் கள், ஆயுதங்கள் போன்றவை பயன்படுத்த தடை விதிக்கப் பட்டுள்ளது. எனினும் கைதிகள் பலர் தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தி வந்துள்ளனர். கடந்த காலங்களில் ஏராளமான செல்போன், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  எனவே காவ ல்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.