tamilnadu

img

பனியன் தொழிலாளி மீது கண்மூடித்தன தாக்குதல்

திருப்பூர், ஜூன் 20 - திருப்பூர் பழவஞ்சிபாளையம் பகுதி யைச் சேர்ந்த பனியன் தொழிலாளி மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய காவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியு றுத்தி பொது மக்கள் மாநகர காவல்  ஆணையர் அலுவலகத்தை முற்றுகை யிட்டனர். திருப்பூர் பழவஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். தனியார் பின்ன லாடை நிறுவனத்தில் பணிபுரிந்து வரு கின்றனர் . இந்நிலையில் புதனன்று  பணி முடிந்து இரவு வீட்டருகே அவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த வீரபாண்டி காவல் நிலைய ரோந்து வாகனத்தில் இருந்து இறங்கிய காவலர் கெளரிசங்கர் என்பவர், சரவணனை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார் . இதனை எதிர்த்து கேட்டதால் கையில் வைத்திருந்த லத்தியால் சரவணனை கடுமையாக தாக்கினார். இதில் சரவணனுக்கு இடுப்பு,  கை பகுதிகளில் பலத்த காயமடைந் தார்.இதனையடுத்து அப்பகுதி யினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.  அப்போது திரும்ப வந்த காவலர் மீண்டும்  அவரைத் தாக்கியதோடு அங்கிருந்த  பெண்களையும் தரக்குறைவாக பேசிய தாகவும் கூறப்படுகிறது . இதையடுத்து இப்பகுதி மக்கள் வியாழனன்று திருப்பூர் மாநகர காவல் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். எந்தவித காரணமும் இல்லாமல் இளைஞரை தாக்கி பெண்களை தரக்குறைவாக பேசிய காவலர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சரவணனின் பெற் றோர் உட்பட அப்பகுதியினர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர் . காயமடைந்த சரவணன் அரசு  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.