tamilnadu

img

மராட்டியத்தில் கொல்லைப்புறம் வழியாக பாஜக ஆட்சியமைத்துள்ளது புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

கோவை, நவ. 24 –  மராட்டிய மாநிலத்தில் ஆளுநரை கைப்பாவையாக வைத்து கொண்டு  கொல்லைப்புற வழியாக பாஜக ஆட்சியமைத்துள்ளது என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். கோவை வந்திருந்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி டிவி எஸ் நகர் பகுதியில் ஞாயிறன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித் தார். அப்போது அவர் கூறியதாவது, மராட்டிய மாநிலத்தில் மிகப்பெரிய  ஜனநாயகப் படுகொலை நடந்துள் ளது. ஆளுநரை கைப்பாவையாக வைத்து கொண்டு கொல்லைப் புற வழியாக பாஜக ஆட்சியமைத் துள்ளது. பெரும்பான்மை பலத்தை  நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடா தது, ஆளுநர் பாரபட்சமாக செயல் படுகிறார் என்பதையே காட்டுகி றது. எனவே, மராட்டிய மாநில சட்ட மன்றத்தை கூட்டி பெரும்பான் மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும். மேலும் மாற்று கட்சி  ஆட்சியுள்ள மாநிலங்களில் ஆட்சி கலைப்பு, குதிரைபேரம், எம்எல் ஏக்களை விலைக்கு வாங்குவது உள்ளிட்ட ஜனநாயக விரோத செயல்பாடுகளில் பாஜக தொடர்ந்து ஈடுபடுகிறது.  பண, அதிகார பலத்தை கொண்டு பாஜக, எதிர்க்கட்சிகளை ஒடுக்குகிறது. எதிர்க்கட்சிகளை பழி வாங்கும் பாஜகவின் நடவடிக்கை ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என் றார்.  மேலும்,  பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக, பிரதமரை சந்தித்து நீட் தேர்வில் விலக்கு கேட்க வேண் டும். நீட் தேர்வில் விலக்களிக்க வேண்டுமென பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி நாடகமாடக் கூடாது எனவும் நாராயணசாமி குற் றம்சாட்டினார்.

;