tamilnadu

img

ரயில் நிலையத்தில் தூய்மை குறித்த விழிப்புணர்வு

 கோவை, செப்.19- ரயில்வே நிலையங்களை தூய்மையாக வைத் திருக்க வேண்டியதன் அவசியம் குறித்து பயணி களிடம் விளக்கி கோவை ரயில் நிலைய வளா கத்தில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ரயில் பயணிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் ரயில்வே துறை சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தென்னக ரயில்வேயின் சேலம் மண்டல ரயில்வே மற்றும் அறம் பவுண்டேசன் தொண்டு நிறுவனம் சார்பில் கோவை ரயில் நிலையத்தில் 150க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பதாகைகளை ஏந்தியபடி மாணவர்கள் நாடகநிகழ்ச்சிகள் மூலமாகவும் நடனமாடியும், குப்பைகளை முறையாக குப்பை கூடைகளில் போட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பயணிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில், ரயில் நிலைய மேலாளர் ராஜூ, அறம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், லதா சுந்தரம் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;