கோவை, மே 31-தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் அன்னூர் பகுதியில் வெள்ளியன்று மது மற்றும் புகையிலை எதிர்ப்புப் பேரணி நடத்தினர்.கோவை மாவட்டம், அன்னூரை அடுத்த வெள்ளமடை ஊராட்சியில் மது அருந்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்த பதாகைகளை ஏந்தி முழக்கங்களுடன் கோவையிலுள்ள வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்கள் சுமார் 2 கி.மீ தொலைவு விழிப்புணர்வு பேரணியின் ஈடுபட்டனர். பேரணியைத் தொடர்ந்து குழந்தைகள் மீதான வன்கொடுமைகளைத் தடுப்பது பற்றிய விழிப்புணர்வு ஓவியத்தை சாமநாயக்கன்பாளையம் பள்ளி சுவர்களில் வரைந்தனர். மேலும், அப்பகுதியில் வீட்டுக் காய்கறித் தோட்டம் அமைத்தல் குறித்த கருத்தரங்கை நடத்தினர். வேளாண்மையில் நவீன தொழில்நுட்ப உத்திகள், பயிர் சுழற்சி, மண் வளம் ஆகியன குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து வெள்ளமடை கிராம சிறுவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகளும், கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இதில் சுமார் 300 மாணவர்களும், பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.