tamilnadu

அவிநாசி மற்றும் உதகை முக்கிய செய்திகள்

ரூ.7லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்

அவிநாசி, மே 7 – சேவூர் முறை விற்பனைக்கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.7 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.அவிநாசியை அடுத்தசேவூர்ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் திங்களன்று நடைபெற்ற ஏலத்தில் 330 மூட்டைகள் வந்திருந்தன. குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.5,450 முதல் ரூ.5,630வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ. 5,180 முதல்ரூ. 5,310 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ 4,300 முதல் ரூ 4,600 வரையிலும் ஏலம் போனது.மொத்தம் ரூ .7 லட்சத்திற்கு ஏலம் நடைபெற்றது. 


வேன் கவிழ்ந்து விபத்து

உதகை, மே 6-மேட்டுப்பாளையம்- உதகை சாலை கல்லாரைஅடுத்துள்ள முதல் கொண்டை ஊசி வளைவு அருகே 30 அடி பள்ளத்தில்திங்களன்று சுற்றுலா வேன்கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம்செய்த 15 பேர் காயமடைந்தனர். அவர்கள்மீட்கப்பட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிசசைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

;