tamilnadu

திருப்பூரில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பதிவு செய்ய ஏற்பாடு

மாநகர காவல் ஆணையர் சஞ்சய்குமார் தகவல்

திருப்பூர், ஜன. 10 – திருப்பூர் மாநகரில் வந்து வசிக்கக்கூடிய புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக மாநகர காவல் ஆணையர் சஞ்சய்குமார் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வெள்ளியன்று செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது: திருப்பூரில் தமிழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்தும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தி னர் புலம் பெயர்ந்து வந்து வசிக் கின்றனர். இவர்கள் அனைவரை யும் முழுமையாக கணினி மூலம் பதிவு செய்வதற்கு ஏற்பாடு செய்து வருகிறோம். அதே சமயம் தற்போது இங்கு எவ்வளவு பேர் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்ற விபரத் தைச் சொல்ல முடியாது. புலம் பெயர்ந்த தொழிலாளர் கள் மட்டுமின்றி சட்டவிரோத மாக இங்கு வந்து தங்கி இருக்கக் கூடியவர்களையும் கண்டுபிடிப் பதற்கு கணினி மூலம் பதிவு செய்வது உதவியாக இருக்கும். இதற்கான ஏற்பாடுகள் இன்னும் 15 நாள்களில் நிறைவடையும் என்று தெரிவித்தார்.

சைபர் குற்றத் தடுப்பு

இது தவிர சைபர் குற்றங்க ளைத் தடுப்பதற்கு வேலம்பா ளையம் காவல் நிலைய மாடியில் சைபர் குற்ற ஆய்வகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. மாநகரில் 2018ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2019ஆம் ஆண் டில் சட்டம் ஒழுங்கு, குற்றத் தடுப்பு மற்றும் போக்குவரத்து காவல் பணிகள் சிறப்பாக நடைபெற் றுள்ளன. முந்தைய ஆண்டை விட 2019இல் களவு வழக்கு கள் 19 சதவிகிதம் குறைந்துள் ளது. 277 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 252 வழக்கு கள் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.1 கோடியே 51 லட்சத்து 84 ஆயி ரத்து 870 மதிப்புள்ள பொருட் கள் மீட்கப்பட்டுள்ளன. 27 கொலை வழக்குகளில் 26 வழக் குகளில் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோத கஞ்சா மற் றும் குட்கா விற்பனை, ஒரு நம்பர் லாட்டரி ஆகியவற்றிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட் டுள்ளன. கஞ்சா விற்பனை தொடர்பாக 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 113 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 118 கிலோ கஞ்சா பறி முதல் செய்யப்பட்டது. ஒரு நம் பர் லாட்டரி விற்பனை தொடர் பாக 283 வழக்குகள் பதிவு செய்து, 300 பேர் கைது செய் யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 61 ஆயிரத்து 795 பறிமுதல் செய்யப்பட்டது. அதே போல் புகையிலைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக 488 வழக்குகள் பதிந்து 496 பேர் கைது செய்யப்பட்டனர். 2322 கிலோ குட்கா பொருட்கள் பறி முதல் செய்யப்பட்டன. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 9 சதவிகிதம் குறைந்துள்ளது. இதில் 4 வழக் குகளில் ஆயுள் தண்டனை பெற் றுத் தரப்பட்டது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 2019 ஓராண்டு காலத் தில் மொத்தம் 21 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். சாலை விபத்து களில் முந்தைய ஆண்டை விட 10 சதவிகிதம் உயிரிழப்புகள் குறைந்துள்ளன.

சிறப்புக் காவல் ஏற்பாடு

காவல் சேவையை மேம்ப டுத்த 22 உள்ளூர் மட்டக்குழுக்கள் அமைக்கப்பட்டு அந்தந்த பகுதி யில் பொதுமக்கள் சுமார் 200 பேர் வாட்ஸ் ஆப் மூலம் இணைக் கப்படுகின்றனர். இப்பணிக்கு தனியாக முழு நேர தலைமைக் காவலர் உடன் இரு காவலர்கள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரம் கண்காணிக்கப்படுகிறது. இந்த சிறப்புக் காவல் அமைப்பு தற் போது முன்னோட்டமாக செயல் படுத்தப்பட்டு வருகிறது. நல்ல முறையில் சட்டம் ஒழுங்கு கட் டுப்பாடு, குற்றத் தடுப்பு செய் யப்படுகிறது. இது தவிர காவலன் செய லியை ஏராளமானோர் பதிவிறக் கம் செய்து பயன்படுத்துகின்றனர். முன்னெச்சரிக்கை, குற்றத் தடுப் புக்கு இந்த செயலியின் பயன் பாடு உதவுகிறது.

காவல் எல்லை விரிவாக்கம்

திருப்பூர் மாநகர காவல் எல்லையை பல்லடம், அவிநாசி பகுதிகளில் விரிவாக்குவதற்கு முன்மொழிவு அரசுக்கு அனுப்பப் பட்டுள்ளது. இது தவிர திருமுரு கன் பூண்டி காவல் நிலையத்துக்கு ராக்கியாபாளையத்தில் இடம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு காவல் நிலையம் அமைப்பது பற்றி உள்ளூர் மக்களிடம் உள்ள தவறான கருத்துகளைத் தெளிவு படுத்துவோம். காவலர் குடியி ருப்பு, காவல் நிலையத்துக்காக ஆண்டிபாளையம், கரைபுதூர் பகுதிகளிலும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. காகித மில்லா நிர்வாகம் என்ற முறை யில் அனைத்து அலுவலக செயல்பாடுகளையும் கணினி மூலம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது மாநகரக் காவல் துணை ஆணையர்கள் வி.பத்ரி நாராயணன், பிரபாகரன் உள் ளிட்டோர் உடனிருந்தனர்.


 

;