tamilnadu

img

பாரதி பாடசாலையின் ஆண்டு விழா

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பெரியநாயக் கன்பாளையம் ஒன்றியம் அறிவொளி நகர் கிளையின் சார்பில் நடத்தப்பட்டு வரும் பாரதி இலவச மாலை  நேர பாடசாலையின் 7 ஆம் ஆண்டு விழாவை அப்பகுதி மக்கள் கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாகமாக நடத்தினர். இதில் பாரதி படிப்பகத்தின் ஒருங்கிணைப் பாளர் ராமச்சந்திரன், வாலிபர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் ந.ராஜா,  மாவட்ட துணை தலைவர் அன்பர சன் மற்றும் தண்டபாணி, அருண் உள்ளிட்டோர் பங்கேற்று பாடசாலையின் ஆசிரியர் மற்றும் கிளை நிர்வாகிகளை கௌரவித்தனர்.