tamilnadu

img

குடிநீர் மேல்நிலைத்தொட்டியை சீரமைத்திடுக

மார்க்சிஸ்ட் கட்சியினர் மாநகராட்சியில் மனு அளிப்பு 

சேலம், நவ.30- பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, அடிப் படை வசதிகள் செய்திட வலியுறுத்தி சனியன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மேற்கு மாநகர குழு சார்பில் மாநக ராட்சி அதிகாரியிடம் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது. சேலம் மாநகராட்சி  1ஆவது கோட்டத்திற்குட் பட்ட ஜாகீர் ரெட்டிப்பட்டி, பெரியமோட்டூர்,காம நாயக்கன்பட்டி  ஆகிய பகுதியில் பழுதடைந்த சாலைகளை செப்பனிட வேண்டும். சாக் கடை கால்வாய்களில் தூய்மை பணி மேற் கொள்ள வேண்டும்.  அருந்ததியர் காலனி யில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்துள்ளதை அப்புறப்படுத்தி விட்டு, புதிதாக கட்டி தர வேண்டுமென  ஏற் கனவே மார்க்சிஸ்ட் கட்சியினர் மற்றும்  பொதுமக்கள் உள்ளிட்டோர் கோரிக் கைகளை நிறைவேற்ற மனு அளிக்கப் பட்டுள்ளது. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இதையடுத்து சேலம் மாநகராட்சி சூர மங்கலம் மண்டல அலுவலகத்தில் உதவி ஆணையாளரிடம் கோரிக்கை மனு அளிக் கப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மேற்கு மாநகர செயலாளர் எம்.கனக ராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் பி.பால கிருஷ்ணன், கிளை செயலாளர் டி.வெற்றிச் செல்வன், ஜி.அழகேசன் ஆகியோர் உடனி ருந்தனர். உதவி ஆணையாளர் கோரிக் கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்தார்.