tamilnadu

img

கேப்டன் லட்சுமி ஷெகாவத் நினைவுதினம்

தருமபுரி, ஜூலை 23- சுதந்திரப்போராட்ட வீரர் தியாகி கேப்டன் லட்சுமி ஷெகாவத் நினைவுதினத்தையெட்டி அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கத்தின் சார்பில் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தருமபுரி, செங்கொடிபுரத்தில் கேப்டன் லட்சுமி ஷெகாவத் உருவப்படத்துக்கு  மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.கிரைஸாமேரி, மாவட்ட துணைத் தலைவர் கே.பூபதி, நிர்வாகிகள் கே.சுசிலா, எம்.மீனாட்சி, நிர்மலாராணி, தமிழ்மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முத்து, ஒன்றிய செயலாளர் என்.கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.