tamilnadu

கோவையில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலி

 கோவை, செப்.25- கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 5 வயது சிறுமி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த மன்சூர் அலி என்பவரின் மகள் ரம்ஜான் பாத்திமா (5). இச்சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்து கடந்த 18 ஆம் தேதியன்று உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக செப்.19 ஆம் தேதி  பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். இருப்பினும் உடல்நிலை மோசமாகிய நிலை யில் கடந்த 23 ஆம் தேதியன்று கோவை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் செவ்வா யன்று காலை சிறுமி பாத்திமா பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமி டெங்கு காய்ச்சல் பாதிப்பால் பரிதாபமாக உயி ரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  முன்னதாக, கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சலின் தாக்கங்கள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. இந்த காய்ச்சல் பாதிப்புகள் மற்றும் காய்ச்சலினால் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் விவரங்கள் ஏதும் முறையாக மருத் துவமனைகள் தரப்பில் தெரிவிக்கப்படுவதில்லை. குறிப்பாக டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் தகவல்களை மாநகராட்சி அதிகாரிகள் சேகரிப்பதில்லை  என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது. இவ்வாறு முறை யான புள்ளிவிபரங்கள் பதியப்படாததால் டெங்கு காய்ச்ச லால் பாதிப்படைந்தவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பது குறித்த தகவல்கள் வெளியில் தெரிவதில்லை.  நோய் தீவிரமானதையடுத்தே நோயாளிகள் அரசு மருத் துவமனைக்கு கொண்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.  டெங்கு போன்ற காய்ச்சல்கள் துவக்க நிலையிலேயே சரி செய்ய வேண்டும். ஆனால் தனியார் மருத்துவமனைகள் நோய் தீவிரமான பிறகு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் நிலை உள்ளது. இதன்பின் அரசு மருத்துவர்கள் எவ்வளவு தீவிரமான சிகிச்சை மற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டபோதும் நோயின் தீவிரம் உயிரை பலி  வாங்கிவிடுகிறது. ஆகவே, பணம் பறிக்கும் எண்ணத் தோடு தனியார் மருத்துவமனைகள் இது போன்ற காய்ச்சல் உள்ளவர்களை அனுமதிப்பதை கட்டுப்படுத்த வேண்டும். குறிப்பாக சில தனியார் மருத்துவமனைகளின் மீது அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காமல் இதனை கட்டுப்படுத்த முடியாது என அரசு மருத்துவர்கள் தெரி விக்கின்றனர்.

;