tamilnadu

img

உக்கடம் மீன் மார்க்கெட்டில் ஆய்வு ரசாயனம் தடவிய 70 கிலோ மீன்கள் பறிமுதல்

கோவை, மார்ச் 5-  கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் பார்மலின்  பயன்படுத்தப்பட்ட 70 கிலோ மீன்களை உணவு பாது காப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகம் முழுவதும் மீன் மார்க்கெட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மீன்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய மீன்வளத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதன் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்,  மீன் வளத் துறை அதிகாரிகளுடன் இணைந்து கோவை உக்கடம் மீன்  விற்பனை நிலையங்கள் மொத்தம் மற்றும் சில்லறை மீன் மார்க்கெட்டில் மீன்களின் தரம் குறித்தும், பார்மலின் கலந்த ரசாயன மீன்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக ஆய்வு நடத்தினர். இதில் பார்மலின் ரசாயனம் தடவிய 70 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் 430 கிலோ கெட்டுப்போன மீன்களும் பறிமுதல் செய்யப் பட்டது. இதன்பின் பார்மலின் தடவிய மீன்களை விற்பனை செய்யக்கூடாது என மீன் விற்பனையாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தி நோட்டீஸ்களை வழங்கினர். மேலும் தொடர்ந்து பார்மலின் தடவிய மீன்களை விற்பனை செய்தால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்ப டும் என எச்சரிக்கை விடுத்தனர். பார்மலின் தடவிய மீன் களை சாப்பிட்டால் வயிற்று வலி உள்ளிட்ட உடல் உபா தைகள் ஏற்படும் எனவும், தொடர்ந்து சாப்பிட்டால் கேன்சர் உருவாக வாய்ப்பிருப்பதாகவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

;