tamilnadu

img

5 மாத ஊதிய பாக்கி - பசிக்கு தவணை சொல்லும் வித்தையை கற்றுத்தா! பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் தொடர் உண்ணாவிரதம்

கோவை, ஜூலை 2– பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர் களுக்கு வழங்க வேண்டிய ஐந்து மாத ஊதிய பாக்கியை உடனடியாக வழங்கக்கோரி மூன்று  நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை செவ்வாயன்று ஒப்பந்த ஊழியர்கள் துவக்கினர்.  தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வளர்ச்சிக்காக பிஎஸ்என்எல் நிறுவனத்தை திட்டமிட்டு சீரழிக்கும் நோக்கத் தோடு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. 4 ஜி சேவை உரிமம் வழங்காதது, பிஎஸ்என்எல் நிறுவனத்திற்குத் தேவையான தளவாடப்பொருட்களை வழங் காதது, துணை டவர்கள் அமைக்க அனுமதிப்பது, மின் கட்டணம் செலுத்தாமல் டவர்களின் மின் இணைப்பைத் துண்டிக்கக் கார ணமாக இருப்பது என தனியார் தொலைத்தொடர்பு நிறு வனங்களைப் பாதுகாக்க இந்திய பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் வளர்ச்சியை முடக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.  இவையனைத்தையும் ஊழியர் கள் ஒன்றுபட்டு எதிர்கொண்டு முறியடித்து வரும் நிலையில், தற்போது ஊழியர்களின் ஊதியம் உள்ளிட்ட உரிமைகளில் கை வைத்து வருகிறது. ஒப்பந்த ஊழி யர்களுக்கும் கடந்த 6 மாதங்க ளாக ஊதியம் வழங்கப்பட வில்லை. இதனை எதிர்த்து மாவட்ட தலைநகரங்களில் மூன்று நாட்கள் தொடர் உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக கோவை தலைமை தொலைபேசி நிலைய வளாகத் தில் துவங்கிய  உண்ணாவிரத போராட்டத்திற்கு ஏ.முகமது ஜாபர், எம்.பி.வடிவேல் ஆகியோர் தலைமை தாங்கினர். போராட் டத்தை துவக்கி வைத்து பிஎஸ் என்எல் ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் ஏ.பாபுராதாகிருஷ் ணன் உரையாற்றினார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சி.ராஜேந் திரன் மற்றும் எஸ்.சண்முகசுந்தரம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஒப்பந்த ஊழியர்களின் போராட் டத்திற்கு ஆதரவு தெரிவித்து பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், ஓய்வூதியர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் திரண்டனர். மூன்று நாட்கள் நடைபெறும் தொடர் உண்ணா விரதம் வியாழனன்று நிறை வடைகிறது. முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மளிகைக் கடைக்கு தவணை சொல்லி யாச்சு, வாடகைக்குத் தவணை சொல்லியாச்சு, பசிக்குத் தவனை சொல்லும் வித்தையை மத்திய அரசே கற்றுத்தா, பாலுக்கு அழும் குழந்தையின் பசிக்குப் பதில் சொல்லு என்கிற உணர்ச்சி மிகு முழக்கங்களை எழுப்பினர்.

ஈரோடு
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார் பாக ஈரோடு பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் நிர்வாகி கண்ணுசாமி,ஒப்பந்த தொழிலா ளர்கள் சங்கத்தின் எம். சையது இத்ரீஸ் ஆகியோர் தலைமை வகித்தனர். பிஎஸ்என்எல் ஊழி யர் சங்கத்தின் மாநில உதவி செயலாளர் வி.மணி யன் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்துப் பேசினார். பிஎஸ்என் எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சி.மணி, ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.பழனி சாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்கள். ஓய்வூ தியர் சங்க நிர்வாகிகள் மாநில அமைப்புச் செயலர் சி. பரமசிவம், மாநில உதவி செயலாளர் பர மேஸ்வரன், மாவட்ட செயலாளர் ராஜமாணிக்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.

;