tamilnadu

img

அன்றும்... இன்றும்...

மக்களவையில் உறுப்பினர் எழுப்பும் கேள்விகள் அவரது பரந்துபட்ட அறிவையும், மக்கள் மீதான அக்கறையையும் பிரதிபலிப்பவை. அந்த வகையில் மார்க்சிஸ்ட் கம்யூ

னிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகள் அந்தந்த காலகட்டத்தில் தேசிய அளவில் மிகுந்தமுக்கியத்துவம் பெற்றவையாகும்.


அன்று...  

மக்களவையில் பி.ஆர்.நடராஜன்: எழுப்பிய கேள்வியும், அரசின் பதிலும் கேள்வி: ஏர் இந்தியா நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி போயிங் விமான நிறுவனம் ட்ரீம்லைனர் விமானங்களை வழங்குவதில் அதீத காலதாமதம் ஏற்பட்டுள்ளதா? ஆம் எனில் அதன் விவரம் என்ன? ஏர் இந்தியா நிறுவனம் அதற்காக ஏதேனும் இழப்பீடு கோரியுள்ளதா?

அமைச்சர் அஜித்சிங் அளித்த பதில்: ஒப்பந்தத்தின்படி 27 எண்ணிக்கையிலான பி787விமானங்களை 2008 செப்டம்பரில் அளித்திருக்க வேண்டும். ஆனால், 2011 அக்டோபர் வரை அளித்திடவில்லை. ஏர் இந்தியா நிறுவனம் அதற்கான இழப்பீடு கோரியுள்ளது. ஆனால், ஒப்பந்தத்தின் ரகசிய காப்பின்படி இழப்பீட்டுத் தொகையை வெளிப்படுத்த முடியாது.


இன்று...

மோடி அரசு 2017 ஜுன் 28ல் ஏர் இந்தியாவை தனியார்மயமாக்க குழு ஒன்றை அமைத்தது. அதற்கு முன்னோடியாக திருவனந்தபுரம் உள்ளிட்ட 6 விமான நிலையங்களை அம்பானியிடம் ஒப்படைத்துள்ளது.

;