tamilnadu

img

மக்கள் சீனத்தின் 70ஆம் ஆண்டு

பெய்ஜிங்கில் எழுச்சிக் கோலம்

பெய்ஜிங், அக். 1- சோசலிசமே எதிர்காலம் என்ற உரத்த முழக்கத்துடன் உலகப் பாட்டாளி வர்க்கத்திற்கு உந்து சக்தியாக திகழ்ந்து கொண்டிருக்கிற மக்கள் சீனக் குடியரசின் 70ஆம் ஆண்டு விழா உலகமே வியக்கும் வண்ணம் பேரெழுச்சியுடனும் பெரும் உற்சாகத்துடனும் அக்டோ பர் 1 செவ்வாயன்று பெய்ஜிங்கில் நடைபெற்றது. பெய்ஜிங்கின் மையப்பகுதியில் அமைந்துள்ள தியானென்மென் சதுக்கத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடியிருக்க, சீன மக்கள் விடு தலை ராணுவத்தின் கம்பீரமிக்க அணி வகுப்புக்கு இடையே சீன மக்கள் குடி யரசின் செங்கொடியை ஜனாதிபதி யும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் சீன மத்திய ராணுவக் கமிஷன் தலைவருமான ஜீ ஜின் பிங் ஏற்றி வைத்து உரை யாற்றினார்.

இதையொட்டி மிகப்பிரம்மாண்ட மான, உலகையே வியப்பில் ஆழ்த்திய, கண்களைக் கவரும் வண்ணப் பேரழகுடன் எண்ணற்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மக்கள் சீனத்தின் மகத்தான தலைவர் மா சே துங்கின் மிகப்பெரிய உருவப்படமும், சீன ஜனநாயகப் புரட்சியின் முன்னோடியான சன் யாட்-சென்னின் மிகப்பெரிய உருவப்படமும் தியானென்மென் சதுக்கத்தில் இடம்பெற்றிருந்தன. சீனப் புரட்சியின் நிகழ்வுகளை நினைவுகூரும் விதத்திலும் மக்கள் சீனத்தின் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலத்தை விளக்கும் விதத்திலும் விதவிதமான கலைநிகழ்வுகள், கண்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. தொடர்ந்து நிகழ்வு கள் நாட்டின் பல்வேறு பகுதியிலும் நடந்து வருகின்றன.