tamilnadu

img

ஈரான் துணை அதிபருக்கு கொரோனா வைரஸ் 

டெஹ்ரான்
சீனாவிலிருந்து ஜெட் வேகத்தில் பரவும் புதிய ஆட்கொல்லி வைரஸான கொரோனா வைரஸ் தற்போது ஈரான், இத்தாலி, தென் கொரியா ஆகிய நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்த தயார் நிலையில் உள்ளது. 

பிப்ரவரி 19-ஆம் தேதி ஈரானில் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தது. அடுத்த ஒரே வாரத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி ஈரான் மக்களை கதிகலங்க வைத்துள்ளது. தற்போதைய நிலவரப்படி ஈரானில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 112 பேர் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சீனாவைத் தவிர்த்து வெளிநாடுகளில் கொரோனா வைரஸ் ஏற்பட்ட உயிரிழப்புகளில் ஈரான் முதலிடத்தில் உள்ளது.  

ஈரானில் துணை அதிபர்களில் ஒருவரான மசூமே எப்டகர் (பெண்)  கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுகாதாரத்துறை துணை அமைச்சரான இராஜ் ஹரிர்ஜி மற்றும் ஒரு எம்.பிக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. கொரோன வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஈரானில் இருந்து பல நாடுகளுக்கும் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.  

ஈரானில் கீஸ் தீவு, சிங்கா தீவு உள்ளிட்ட 4 தீவுகளில் மீன்பிடித் தொழில் செய்யும் தமிழர்கள் தங்களை மீட்டு அழைத்துச் செல்ல வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

;