tamilnadu

img

பிரேசிலில் கொரோனா  பாதிப்பு 10 லட்சத்தை நெருங்குகிறது...  

ரியோ 
தென் அமெரிக்க கண்டத்தின் மிகப்பெரிய நாடான பிரேசிலில் கொரோனா பரவல் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அந்நாட்டின் கிழக்கு கடற்கரை மாகாணமான சாவோ பவுலோ நகரம் கொரோனாவால் அதிக சேதாரத்தை சந்தித்துள்ளது. அங்கு இதுவரை 1.78 லட்சம் பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளனர். 10 ஆயிரத்து 694 பேர் பலியாகியுள்ளனர். மேலும் ரியோ டி ஜெனிரோ, சியாரா. பாரா மாகாணங்களும் கொரோனாவால் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளன. 

இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை நெருங்குகிறது. இதுவரை அங்கு 9 லட்சத்து 60 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், 5 லட்சத்து 3 ஆயிரத்து 507 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது பிரேசில் கொரோனாவுக்கான பாதிப்பு அட்டவணையில் (உலகம்) 2-வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் நிலையில்,  அங்கு இதுவரை 22 லட்சத்து 34 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்து 19 ஆயிரத்து 941 பேர் பலியாகியுள்ளனர். 9.18 லட்சம் பேர் கொரோனாவை வென்று வீடு திரும்பியுள்ளனர்.   

;