சென்னை, ஜன. 31- 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் வங்கி சேவை முற்றிலு மாக முடங்கியது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை தாமதப் படுத்தாமல் உடனே துவங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி வங்கி சங்கங் களின் கூட்டமைப்பு சார்பில் வெள்ளி கிழமை (ஜன. 31) சனிக்கிழமை (பிப்.1) ஆகிய இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. அதை யொட்டி நாடு முழுவதும் முக்கிய தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன் ஒருபகுதியாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் தலைவர் சி.எச்.வெங்கடாசலம், பாலாஜி, அதிகாரி கள் சங்க நிர்வாகிகள் ராஜேந்திரன், நாகராஜன், சூரியநாராயண ராவ், இந்திய வங்கி ஊழியர் சம்மேளன அகில இந்திய செயலாளர் கே.கிருஷ்ணன், சி.பி.கிருஷ்ணன், ராஜகோபால் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். அனைத்து பொதுத்துறை வங்கிகளும் மூடப்பட்டி ருந்தன. வேலை நிறுத்தத் தில் 100 விழுக்காடு ஊழி யர்களும், அதிகரிகளும் கலந்து கொண்டனர். இதுகுறித்து சி.எச்.வெங்கடாசலம் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:
கடந்த 2014ஆம் ஆண்டில் இருந்து வங்கி ஊழியர்கள் அதிகாரிகளுடைய ஊதிய உயர்வு நிலுவையில் உள்ளது. இன்னும் ஒப்பந்தம் ஏற்பட வில்லை. 30 மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் முன்னேற்றம் இல்லை. எனவே உடனடியாக பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து தொழிலாளர் நல ஆணையருடன் ஜனவரி 27 அன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதிலும் தீர்வு எட்டப்படவில்லை. நிர்வா கத்தின் பிடிவாதப் போக்கி னால் சமரசம் ஏற்படவில்லை. மீண்டும் வியாழக்கிழமை (ஜன. 30) நிர்வாகத்திற்கும் தொழிற்சங்கத்திற்கும் பேச்சுவார்த்தை நடை பெற்றது. அதிலே ஓரளவுக்கு மட்டுமே ஊதியத்தை உயர்த்த ஏற்றுக் கொண்டார் கள். பிற கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகையால் அறிவித்தபடி வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டுள்ளோம். இதில் நாடு முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களும், அதிகாரிகளும் பங்கேற்றுள் ளனர்.இதே நிலை நீடித்தால் வருகின்ற மார்ச் 11, 12, 13 ஆகிய 3 நாட்கள் மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடு வோம். தமிழ்நாட்டில் 16 ஆயிரம் வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ளன. 9 ஆயிரம் கோடி மதிப்புள்ள காசோலை சேவை பாதிக்கப்பட்டுள் ளன. இவ்வாறு அவர் கூறினார்.