tamilnadu

img

உ.பி., சட்டமன்ற ஊழியர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று... 

லக்னோ 
நாட்டின் பெரிய மாநிலங்களில் ஒன்றான உத்தரபிரதேசத்தில் இன்னும் கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை. இதுவரை அங்கு 1.54 லட்சம் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,449 பேர் உயிரிழந்துள்ளனர். 1 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ள நிலையில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். 

இந்நிலையில் அம்மாநில சட்டமன்ற ஊழியர்கள் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சட்டமன்றம் சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு கிருமிநாசினியுடன் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் சட்டமன்றத்துடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களுக்கு கோரோனா  பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.