tamilnadu

img

கொரோனா பலி 2,236 ஆக உயர்வு

பெய்ஜிங், பிப்.21- சீனாவில் தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,236 ஆக அதிகரித்துள்ளது. வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75,465 ஆக உள்ளது.  ரென்சாங் சிறையில் இருக்கும் 200 சிறைக் கைதிகளுக்கும், 7 காவலர் களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்ப தாக ஷான்டாங் மாகாண சுகாதாரத் துறை ஆணையம் தெரிவித்துள்ளது. ஸென்ஜியாங் மாகாணத்தின் ஷிலிஃ பெங் சிறையில் 34 கைதிகளுக்கு கொரோ னா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் பல்வேறு பகுதிகளில் இருக்கும் சிறைகளில் மட்டும் 411 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இது 631 வரை அதிகரித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஈரானில் குவாம் மாகாணத்தைச் சேர்ந்த  2 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டு சுகா தாரத்துறை அமைச்சகம் தெரிவித் துள்ளது.  அதனால் வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குவாம் மாகாணத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  தற்போது தென் கொரியாவில் புதிதாக 100 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், சுகாதார ரீதியாக நாட்டில் அவசரநிலை இருப்ப தாக அந்நாட்டின் பிரதமர் சூங் தெரி வித்துள்ளார். வியாழக்கிழமை அந்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டிருந்த ஒருவர் உயிரிழந்த நிலை யில், தற்போது தென் கொரியாவில் இரண் டாவது மரணம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. தென் கொரியாவின் தெற்கு பகுதி நகரங்களான டேகு மற்றும் சேநோங்டோ ஆகியவை ‘சிறப்பு பரா மரிப்பு மண்டலங்களாக’’ அறிவிக்கப் பட்டுள்ளன.

;